29.7.09

காக்கைக்கும் தன் குஞ்சு ........
குழந்தைகள் தெரியாமல் கேட்கும் கேள்விகள் சுவையானவை,

"அம்மா எனக்கு கீரை வேண்டாம்"

"கீரை கண்டிப்பாய் சாப்பிடனும் , அப்ப தான் கண்ணு நல்லா தெரியும்"

கீரை சாப்பிட்டு முடித்த பின்

"இப்ப என் கண்ணு நல்லா தெரியுதாம்மா"

- இது என் மகள் 4 வயதில் கேட்ட கேள்வி.


தெரிந்து செய்யும் சேட்டைகள் அதைவிட சுவையானவை,

'ஒள ' எழுத்தை கற்றுக்கொள்ளும் போது

"ள என்ன 'ஒ'வோட குட்டி பாப்பாவா , பக்கத்திலேயே ஒட்டிகிட்டு இருக்கு ? "

"ஆமாம்டா செல்லம்" -மகளுடைய அறிவை மெச்சியபடி நான்

"அப்ப அதுக்கு பின்னால வால் மாதிரி கொஞ்சம் நீட்டி போடறியே , இது என்ன வால் பாப்பாவா?"

"ஆமாம் இதுவும் உன்னை மாதிரி வால் பாப்பா தான்" - மறுபடியும் நான் (இரண்டாம் முறையாய் மகளுடைய அறிவை மெச்சியபடி)

எப்படியோ ஞாபகம் வைத்துக்கொண்டால் சரி தான்!

5 comments:

நர்சிம் said...

//"ள என்ன 'ஒ'வோட குட்டி பாப்பாவா , பக்கத்திலேயே ஒட்டிகிட்டு இருக்கு ? "//

ரசித்தேன்.

HVL said...

நன்றி நர்சிம் , உங்கள் பின்னூட்டம் எனக்கு மேலும் எழுதும் ஆர்வத்தை தூண்டுகிறது.

Charu said...

Your kids are known for such questions!! :) :) :)

Charu said...

I still remember your kid asking "Amma, yen amma, neeyum appavum kalyanam pannika koodathu?"

HVL said...

:):)