26.10.09

புது எழுத்து

ஆர்வம் இருக்கிறது

மனம் நிறைய !

மிதிவண்டி கற்றுக்கொள்ளும்

சிறுமியாக நான்


சமநிலை தடுமாறினாலும்

பிடரியைப் பிடித்து

தள்ளுகிறது வெறி


எழுதுவது தவிர்த்து

எந்த வேலை செய்தாலும்

எழுகிறது

எழுதவில்லையே

என்ற குற்றவுணர்ச்சி


பிடிபடாமல் பூச்சிகாட்டினாலும்

என்றாவதொருநாள்

பிடிபட்டே தீரவேண்டும்

எழுத்து


இந்த நம்பிக்கையில்

எழுதினேன்

எழுதுகிறேன்

இன்னும் எழுதுவேன்.

2 comments:

தேவன் மாயம் said...

சமநிலை தடுமாறினாலும்

பிடரியைப் பிடித்து

தள்ளுகிறது வெறி///

இந்த வெறி போதும் தொடர்ந்து எழுத!!

HVL said...

@ தேவன் மாயம்
உற்சாகமூட்டும் உங்கள் கருத்துக்கு நன்றி.