4.12.09

மாங்காய்


நற்குடியில் பிறந்து

பசுமையான இல்லத்தில்

உயர்வாய் வளர்ந்தேன்.


கண்ணடிக்கு தப்பித்து

கணநேர இடைவெளியில்

கல்லடிக்கும் தப்பித்தேன்.


உந்தன் கைபிடியில்

மறுவீடு வந்த

எனக்கு

கிடைத்ததோ வெட்டும் குத்தும்.


உப்பிட்டவரை உள்ளளவும் நினைத்து

உடல்மேலிட்ட காரம் தாங்கி

உன் விரல்நுனி தீண்டலுக்கு

மேஜையோரம் காத்திருக்கிறேன்

ஊறுகாயாய்.....