1.1.10

பிங்கு 2010


என் பெண்ணிடம் புத்தாண்டு வருவதைப் பற்றி எடுத்துச் சொல்ல முயற்சித்தேன்.

“இன்னியோட 2009 முடிஞ்சி 2010 வருதுடா”

“எங்கம்மா?”

“இந்த வருடமெல்லாம் நோட் புக்குல _/_/2009 ன்னு எழுதினல்ல, இனிமே
மண்டே ஸ்கூலுக்கு போகும் போது 04/01/2010 ன்னு தான் போடணும்.”

“எப்பம்மா வருது ?”

“இன்னிக்கி நைட் 12 ‘ஓ’ க்ளாக். இன்னமும் 2 அவர்ஸ்ல வருது.”

மறுபடியும்


“எங்கம்மா?”

பாலர் பள்ளியில் படிக்கும் அவளுக்கு இதற்கு மேல் எப்படி புரியவைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த போது

“எங்கம்மா வருது ? தேட்டர்லியா?”

(2012 பார்த்ததோட எபெக்ட்டு தான் வேற என்ன !)

இந்த இடுகையைப் படிக்க இங்கே வந்த உங்களுக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!1 comment:

Charu said...

2010 thaangaala :) :)