5.2.10

மழலைச் சொல்

என் தோழி , அவள் மகன் ராகுல்.

தோழி மற்றொரு தோழியின் குழந்தையைக் கொஞ்சி கொண்டிருந்தாள்.

“செல்ல ராகுல் , குட்டி ராகுல் , பட்டு ராகுல் .....”

சற்று தள்ளி வடையைக் கடித்துக் கொண்டிருந்த ராகுல் , தாயின் அருகே வந்தான். அம்மாவின் கழுத்தைக் கட்டிகொண்டு குழந்தையை ஆர்வமாக எட்டிப் பார்த்தான். பிறகு இப்படி கேட்டான்,

“இத்த்து நான்னாம்ம்மா?”

____________________________________________________________________


பிங்குவிற்கு பெண் குழந்தை என்றால் கொள்ளை ஆசை.

“ அம்மா கயல்விழியோட பாப்பாவ நாம வாங்கிட்டு வந்துடலாம்மா...”

“அப்புறம் யார் பாப்பாவ பாத்துக்கறது?”

“நீதான்...”

“என்னால முடியாதுப்பா!”

“ஏம்ம்மா? உனக்கு வயசாகப் போகுதா?”

“எனக்கு இப்பவே வயசாயிடுச்சே!”

“நீ சும்மா சொல்லுற ! நாங்கள்ளாம் பெருசானா தான உனக்கு வயசாகனும்?”

!!!!!!!!!!!
_____________________________________________________________________

2 comments:

Sangkavi said...

குழந்தைகளின் மொழிகளை கேட்பதில் அது ஒரு தனி சுகம் சொல்ல வார்த்தையில்லை....

HVL said...

உண்மை தான் , சங்கவி!