28.3.10

மூன்று நிகழ்வுகள்

நிகழ்வு 1:

மகள் பின் தொடர , கணவருடன் தொலைபேசியபடி வீட்டின் வெளியே வந்தேன். உள்ளே சிக்னல் பிரச்சனை இல்லையென்றாலும் பழக்கதோஷம்!

நாங்கள் குடியிருப்பது பத்து மாடிகளுக்கும் மேலே. குட்டை மரங்களையும், தூர ரயில்பாதையில் அவ்வப்போது இரைச்சலோடு செல்லும் ரயிலையும் , வெட்டவெளியில் தெரிந்த முழு மஞ்சள் நிலவையும் ரசித்தபடி ,வீட்டை நெருங்கிவிட்டதாய் தொ.பேசியில் தெரிவித்த கணவரை வரவேற்க தயாராய் நின்றோம் , நானும் மகளும்.

வெளியே பொருத்தப்பட்டிருந்த மின்சார மீட்டரில் என் கவனம் சென்றது. வேகமாய் சுற்றும் அதைப் பார்த்து அரைநிமிடத்தைக் கரைத்தேன்.

“அம்மா!, அப்பா எப்பம்மா வருவாரு?”

“இன்னும் பத்து நிமிஷத்திலப்பா”

“நான் டென் எண்ரத்துக்குள்ள வந்திடுவாரா?”

“இல்லப்பா, நீ பத்துவாட்டி சிக்ஸ்டி எண்ணனும்”

அவளுடைய எண்ணறிவு நூறு வரை தான். அதற்கு மேல் சொல்லித்தர நான் அவசரப்படவில்லை.நிகழ்வு 2:

“அம்மா , அப்பா எப்ப வருவாரு?”

இந்த முறை கணவருடன் தொ.பேசாததால்

“தெரியலப்பா!”

என்னை வெளியே அழைத்துப்போய் மீட்டரைக்காட்டி,

“இப்ப பாத்து சொல்லு!”

?????????


நிகழ்வு 3:

நிகழ்வு 2 ன் போது எவ்வளவு எடுத்து சொன்ன போதும் மகள் நம்பவில்லை .
‘நீ என்ன ஏமாத்தற!”
மட்டுமே பதிலாய் வந்தது.

அன்று குடும்பமாய் வெளியே சென்று வந்தோம்.

“அப்பா! என் காலெல்லாம் வலிக்குது”

“அது தான் வீட்டுக்கு வந்துட்டோமே! உள்ள போய் பாப்பா படுத்துக்க வேண்டியது தான். “

“நாம எவ்வளவு தூரம் நடந்தோம்னு பாத்து சொல்லுங்க!”

மறுபடியும் மீட்டரைக் காட்டினாள்.

மிகத்தெளிவாய் அன்று அப்பாவின் வரவைக் கண்டுபிடித்த விதத்தையும், அந்த மீட்டரின் பயன்பாட்டையும் விளக்கிய பிறகு அவள் உதட்டை இடவலமாய் விரித்து பல்வரிசையினிடையே நாக்கைத்துருத்தி
‘ய் யீ யீ ஈ ஈ ஈ ஈ..’ என்று
சிரித்த போது எங்களுக்கும் வந்தது சிரிப்பு .

3 comments:

ஜெகநாதன் said...

//அவளுடைய எண்ணறிவு நூறு வரை தான். அதற்கு மேல் சொல்லித்தர நான் அவசரப்படவில்லை.

//
தாயன்பும், தன்னம்பிக்கையும்​தொனித்த வரிகள்! மிக ரசித்தேன்.
வாழ்வின் இயல்பான சம்வங்களில்தான் பெரிய தத்துவங்கள் பிறக்கின்றன!

ஜெகநாதன் said...

எங்களுக்கும் வந்தது சிரிப்பு :)))

HVL said...

உங்கள் கருத்துகளுக்கு நன்றி ஜெகநாதன்!