18.4.10

தாய்ப் பாசம்அடம் பிடித்து அழுதாள்,
அடுத்துள்ள குழந்தையின்
பொம்மை வேண்டுமென !

கொஞ்சியே பேசி
பவுடர் கலையாமல் சமாளிக்கும்
விளம்பரத் தாய் போல் வளர்க்க
எனக்கும் ஆசை !

ஆனால். . .
அறிவுரை செயலற்று போக,
பொறுமையும் தேய்ந்தது.
ஓங்கி வைத்தேன் காலில்,
அலறல் நெஞ்சைப் பிளந்தது!

இனி
வன்முறை கண்டிப்பாய் கூடாது
என்று சபதம் கொண்டேன் ,
எழுபத்தேழாவது முறையாக!

2 comments:

க.பாலாசி said...

அந்த குழந்தை அழற படத்தப்பாக்குறப்பவே மனசுக்குள்ள ஏதோ செய்யுதுங்க... எத்தனை முறை சபதம் எடுத்தாலும் சில விசயங்கள் தவிர்க்கவே முடியாததுதான்.. தாய்க்கும்கூட...

HVL said...

நன்றி பாலாசி