28.4.10

ப்ளாக் எழுதுவதற்கான அடிப்படைத் தகுதிகள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் ப்ளாகர் உலகில் பிழைத்துக் கொள்ளலாம்.

1. மனதிலிருப்பவற்றை ,சொற்களைக் கொண்டு அடுத்தவர் மனதில் படமாய் வரையும் திறமை, பிறவியிலேயே பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ப்ளாக் எழுதும் முன்பே , தமிழ் எழுத்துகளோடு பரிச்சயம் கொண்ட ஒரு குட்டி எழுத்தாளானாய் முன்னனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
இல்லாவிட்டால் , ‘அரை வேக்காட்டு எழுத்து’, ‘நீயெல்லாம் ஏன்யா எழுதற ?’ , போன்ற பின்னூட்டங்களை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமாவது பெற்றிருக்க வேண்டும்.


2.ஏதேனும் ஒரு துறையில் கரைகண்டிருக்க வேண்டும் .
இலக்கியம் , ஜோதிடம், கணினி , சமையல் ,மொக்கை . . . என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
தன் துறையின் மீதிருக்கும் ஆர்வத்தின் காரணமாக , தானாகவோ அல்லது வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியோ, எழுத்து வலைக்குள் விழ வாய்ப்புகள் அதிகம்.
விரைவாய் ப்ளாகர் உலகில் ஒன்றிவிடும் சாத்தியம் இவர்களுக்கு உண்டு.


3.நிறைய ப்ளாகர்களை நண்பர்களாக பெற்றிருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் இருபது பேராவது தொடர்ந்து பின்னூட்டம் இட்டால் , யாருக்கு தான் எழுதும் ஆர்வம் ஏற்படாது? அதுமட்டுமில்லாமல், தொடர்பதிவு எழுதும்படி வரும் அழைப்புகளைக் கொண்டே முன்னேறிவிடலாம்.
இந்த இடத்தில் கண்டிப்பாய் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.

‘55 வார்த்தைக் கதை எழுதுவதில் ஒரே ஒரு சௌகரியம் . தினம் ஒரு 55-கதை எழுதலாம். ஏதாவது ஒன்று தேறும், 365 மோசமான 55-கதைகளை யாராலும் எழுத முடியாது.’ – சுஜாதாவின் இக்கருத்தை ப்ளாக் எழுதுவதற்கும் பொருத்திக் கொள்ளலாம்.


4.சுயவிளம்பரம் செய்துக் கொள்ளும் திறமை வேண்டும்.

பிரபல ப்ளாகர்களின் பின்னூட்டதில் ‘உன் நடை மோசம்’ , ‘ ஆழம் தெரியாமல் காலை விடாதே!’ , 'ஏய்யா, உனக்கு இந்த வீண் பொழப்பு’ , போன்ற கருத்துகளை விட்டுச் செல்லலாம்.
‘யார் இந்த கொம்பன் ?’ என்று பார்க்கவாவது பலர் வந்து செல்வார்கள். முடிந்தால் இரண்டு வார்த்தை திட்டியாவது பின்னூட்டமிடுவார்கள். இப்படியாவது மக்கள் ப்ளாக் பக்கம் வந்தால் சரி!


மேற்பட்ட தகுதிகள் எதுவும் இல்லை என்றால் கவலை வேண்டாம்!தினமும் எதையாவது ஒன்றை எழுதிவிட்டு , 'யாராவது வந்து படிக்க வேண்டும்' என்று இஷ்ட தெய்வத்திற்கு தேங்காய் உடைப்பதாய் வேண்டிக் கொள்ளலாம். தெய்வாதீனமாகவோ அல்லது மூன்றாம் பத்தியில் சொன்ன சுஜாதாவின் விதிப்படியோ கண்டிப்பாய் க்ளிக்காகிவிடும். தேவை அண்டா அண்டாவாக தன்னம்பிக்கை மட்டுமே!

யாரையும் புண்படுத்துவதற்காக இதை எழுதவில்லை. ச்சும்மா எனக்குத் தோன்றியதை பகிர்ந்துக் கொண்டேன். :):):)

15 comments:

Cable Sankar said...

எப்பவுமே கண்டெண்ட் இஸ் த கிங்

Cable Sankar said...

:)

HVL said...

ஒப்புக் கொள்கிறேன் !
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

venkatesan said...

உண்மையை சொல்றியே,உமக்கு இந்த வேலை தேவையா?(எப்புடி!எல்லாம் உங்க பாடம் தான்)

HVL said...

நன்றி venkatesan!

Geetha said...

:)

HVL said...

நன்றி geetha!

அனுஜன்யா said...

நகைச்சுவைக்காக எழுதினாலும் நிறைய உண்மைதான். எவ்வளவு முயன்றாலும், ஒரு தருணத்தில் ஒரே அலைவரிசையில் இருப்பவர்கள் ஒரு குழுமமாக மாறுவது - a natural process.

ஆனாலும், கேபிள் சங்கர் சொல்வது போல், தொடர்ந்து நல்லா எழுதி வந்தால், நிச்சயம் கவனிக்கப்பட்டு, நிறைய பேர்களை வாசகர்களாகப் பெறுவீர்கள். I like your writing style. Uncomplicated and interesting. All the best.

அனுஜன்யா

HVL said...

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி அனுஜன்யா!

நர்சிம் said...

ஆஹா..அடி பின்னல். சரியான கருத்துகள் பாஸ்.

க.பாலாசி said...

அட.. இந்தமாதிரி ஐடியா கொடுக்க எனக்கு ஆளு இல்லாம போச்சுங்க... முன்னாடியே சொல்லியிருந்தா பாலோ பண்ணியிருப்பேன்... ம்ம்ம்........

நகையுடன் நடையும் அசத்தல்....

LK said...

நல்ல நடை . நர்சிம்மோட தளத்தில் உங்கள் வலைப்பூ அறிமுகம் கிடைத்தது. தொடர்ந்து எழுதுங்கள் . மேலும் உயர வாழ்த்துக்கள்

HVL said...

@ நர்சிம் , பாலாஜி, LK.
ஊக்கமூட்டும் உங்கள் கருத்துகளுக்கு நன்றி!

ganesh said...

அப்படியே எனது blog யும் கொஞ்சம் பார்த்து தேருமா இல்லையா என்று சொன்னால் கொஞ்சம் சந்தோசப்படுவேன்.....

நன்றாக இருந்தது....(இது 4 point ல் சேராது)

கபிலன் said...

உங்களின் இந்த பதிவை மனத்தில் நிறுத்தி என் முதல் பதிவை தொடங்குகிறேன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள். நன்றி.