18.5.10

வீணாப் போன குடும்பம்!

பெரும்பாலான நெடுந்தொடர்கள் , எத்தனை நாட்கள் இடைவெளி விட்டுப் பார்த்தாலும் புரியும் வகையிலேயே ,‘கண்டின்யுவிட்டி’ விட்டுப் போகாமல் இருக்கின்றன. இது நெடுந்தொடர்களின் ப்ளஸ் பாயிண்ட்.

இதுவரை குறிப்பிட்ட தொடரைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணமோ , கட்டாயமோ எனக்கு ஏற்பட்டதில்லை. அதே போல வீட்டில் நடமாடும் நேரம், கடைக்கண் பார்வையில் படும் தொடர்களைப் பார்க்கக் கூடாது என்ற வைராக்கியமும் இல்லை. இது தான் எனக்கும் சீரியலுக்கும் நேற்று வரையிலான உறவு.

இப்படி இருந்த நான் , இப்போது ஒரு குறிப்பிட்ட தொடர் வந்தால் எகிறி ரிமோட்டை எடுத்து சிகப்பு பொத்தானை அமுக்குகிறேன். இத்தகு பெருமையைப் பெற்றது ‘நம்ம குடும்பம்’ . கொஞ்ச நாளாக வசந்ததில் ,எல்லோரும் தொ.காமுன் ஓய்வாக அமரும் இரவு எட்டு மணிக்கு , ஒளிபரப்பாகும் இந்தத் தொடர் , ரேட்டிங்கை எகிறச் செய்கிறதோ இல்லையோ , பி.பி யை எகிறச் செய்கிறது.

காதலனின் அண்ணனைச் சூழ்நிலையின் காரணமாக திருமணம் செய்துக்கொள்ளும் கதாநாயகி. அண்ணிக்கே டார்ச்சர் கொடுக்கும் காதலன், இடையூறாக வந்த அம்மாவையும் கொன்று விடுகிறான். காதலன் என்று நினைத்து தவறுதலாக கணவனைக் கொன்றுவிடும் கதாநாயகி. அன்ணியுடன் தப்பான உறவு இருப்பதாகச் சாதிக்கும் காதலன்.
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!

பைத்தியக்கார ஆஸ்பத்திரியில வைத்தியம் பாக்கற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் புடிச்ச நெலம தான் எனக்கு.

இத்தனைக்கும் தொடர்ந்து இந்தத் தொடரை நான் பார்த்ததில்லை. ஆனாலும் அவ்வளவு தெளிவு. இதில் ‘நம்ம குடும்பம் . . . நல்ல குடும்பம் . . . ‘ என்று டைட்டில் சாங் வேறு! ‘நம்ம’ வில் யாரை உடன் சேர்த்துக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. வேண்டுமானால் இந்த குடும்பத்தை வைத்து பார்க்கும் போது ‘ நம்ம குடும்பம். . . நல்ல குடும்பம் . . . ‘ என்று நம் குடும்பத்தாருடன் சேர்ந்து மனம்விட்டுப் பாடலாம்.

10 comments:

அனுஜன்யா said...

ரொம்ப நாட்கள் முன்னாடி சன் டி.வி.யில் வந்தது என்று நினைக்கிறேன். ரொம்ப அபத்தமான தொடர் :(

அனுஜன்யா

HVL said...

மிக்க நன்றி அனுஜன்யா !

அன்புடன் அருணா said...

/இதுவரை குறிப்பிட்ட தொடரைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற எண்ணமோ , கட்டாயமோ எனக்கு ஏற்பட்டதில்லை. அதே போல வீட்டில் நடமாடும் நேரம், கடைக்கண் பார்வையில் படும் தொடர்களைப் பார்க்கக் கூடாது என்ற வைராக்கியமும் இல்லை. இது தான் எனக்கும் சீரியலுக்கும் நேற்று வரையிலான உறவு. /
சேம் ப்ளட்!

HVL said...

நன்றி அருணா!

நர்சிம் said...

நல்லா எழுதி இருக்கீங்க.

க.பாலாசி said...

//ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!//

அதேதாங்க... அப்டித்தான் யோசிப்பாய்ங்க போலருக்கு...நல்லவேள நான் எந்த தொடரையும் பாக்குறதில்லை...

HVL said...

நன்றி நர்சிம் , பாலாஜி.

கமலேஷ் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க....தொடருங்கள்...

HVL said...

நன்றி கமலேஷ்!

Anonymous said...

read yours on narsim's reco...good one..