25.6.10

அது அவங்க பிரச்சனை (55 கதை -2)“இந்தக் குழந்தைய, கலச்சுடு!”

“பெண்ணாய் இருந்தாலும் இது நம்ம குழந்தை! என்னால முடியாதுங்க!” ப்ரியா ஆக்ரோஷமாய் கத்தினாள்.

சேகர் பொறுமையிழந்தான்.

ஓரமாய் நின்றுக் கொண்டிருந்த மரகதத்திற்கு படபடப்பாய் இருந்தது. தன் கருத்துக்கு அங்கே மதிப்பில்லை என அவள் உணர்ந்திருந்ததால், எதுவும் பேசவில்லை.

“சொல்லிட்டேயிருக்கேன், எதிர்த்து பேசிட்டேவா இருக்க! உன்னை...” பல்லைக் கடித்தவாறே திரும்பியவனின் கண்களில், அங்கேயிருந்த கத்தி பட்டது.

‘வேண்டாம்’ -பதறினாள் மரகதம்.

கத்தியை எடுத்த சேகர் அப்படியே உறைந்தான்.

பெருமூச்சு விட்டாள் மரகதம்.

‘தொடரும்’ போடப்பட்டது.
(55 கதைகள் பற்றிய அறிமுகம் இங்கே
http://rithikadarshini.blogspot.com/2010/06/55.html)

2 comments:

கபிலன் said...

நன்றாக இருக்கிறது.
கடைசி இரண்டு வரிகளை மாற்றிப்போட்டால் என்ன...என்று தோன்றுகிறது.
நானும் முயற்சித்தேன். கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது.
55 .... 100 ஆகி கடைசியில் தொடர்கதை ஆகிவிட்டது.
மீண்டும் முயற்சிக்கிறேன்.

HVL said...

உங்கள் கருத்துக்கு நன்றி கபிலன்! மாற்றிவிட்டேன்.முன்பைவிட நன்றாய் இருப்பதாய் தோன்றுகிறது.