30.6.10

வேதனை (55 கதை -4)

சுற்றிலும் இருட்டை உணர்ந்தான். கண்களைத் திறக்க முடியவில்லை. உடம்பை சற்றே நெளித்தான். கைகள் நீட்ட முடியாதவாறு மடங்கியிருந்தன. உடல் பிசுபிசுத்தது.

அருகே பேச்சொலி கேட்டது. உதவிக்காக, குரல் வந்த திசையில் நகர்ந்தான். தலையில் ஏதோ இடித்தது.இப்போது வெளியே அலறல் சத்தம் கேட்டது.

பயம் ஏற்பட்டிருக்க வேண்டும்,சற்றே நிதானித்தான்.

இந்த முறை முன்னிலும் வேகமாய் நகர்ந்தான்.
திடீரென்று மேனியில் வெளிச்சம் விழ, பலவந்தமாய் இழுக்கப்பட்டான்.

“அட! ஆம்பள புள்ள...“
கொடுக்கப்பட்ட முதல் அடிக்கு, சத்தமாய் அலறினான்.(55 கதைகள் பற்றிய அறிமுகம் இங்கே
http://rithikadarshini.blogspot.com/2010/06/55.html)

4 comments:

கபிலன் said...

ஜனித்த குழந்தை..
வளரட்டும் சிறந்து.
பேர் சொல்லும் படி.

HVL said...

நன்றி கபிலன்

அப்பாதுரை said...

உலகின் மிகச் சிறந்த ஒரு வரி இலக்கியம் என்று பாராட்டப்படும் கதையைப் படித்திருக்கிறீர்களா? ernest hemingway எழுதியது.

warning:அத்தனை சோகம்.

அப்பாதுரை said...

வளமான கற்பனை.