10.6.10

கடி. . . கடி. . . கடி. . .

ரொம்ப நாள் கழித்து மறுபடி இன்று மொக்கை

1. ஒரு ஒட்டகத்த ஃபிரிட்ஜீக்குள்ள(fridge) எப்படி வெக்கறது?

2.
அ. கழுகுக்கும் மனிதனுக்கும் உள்ள வேற்றுமை என்ன?

ஆ. கழுகுக்கும் மனிதனுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

( உருவ ஒற்றுமைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது)

3.'பாம்பு நம்பர் 2' வுக்கு 'பாம்பு நம்பர் 1' போன் செய்தது.

போனை அடித்தது 'பா.நம்பர்.1' தான் என்று, போனை எடுக்காமலேயே,

'பா.நம்பர்.2' கண்டுபிடித்துவிட்டது. எப்படி?

(இரண்டு பாம்புகளின் வீட்டிலும் காலர் ஐடி இல்லை)

4.எட்டு பாம்புப் புற்றுகள் , உள்ளே பாம்புகளுடன்.

பாம்பாட்டி ஒருவன் அங்கே வந்து மகுடி வாசிக்க,

1,3,5,7 புற்றிலிருந்த பாம்புகள் மட்டும் வெளியே வந்து படம் விரித்து ஆடின. ஏன்?

(பாம்புக்கு காது இருக்கான்னு சம்பந்தமில்லாமல் கேட்கக் கூடாது)

5.Dasaratha is Rama’s father.

Rama is Dasarada’s son.

So Dasaratha is Rama’s father’s _______.

6.ஒரு காட்டிலே மிருகங்களுக்குள்ளே மீட்டிங்.

யானை , புலி , சிங்கம் , நரி, ஓணாய், எல்லாம் வந்தன. ஆனால் ஒரு ஒட்டகம் மட்டும்

வரவில்லை. ஏன்?

பதில்கள் முதல் பின்னூட்டதில்.


மேலே உள்ளவை பிடித்திருந்தால் இதையும் படிக்கலாம்
http://rithikadarshini.blogspot.com/2009/08/blog-post.html

6 comments:

HVL said...

1.கஷ்டப்பட்டு. (பீஸ் போட்டும் வைக்கலாம்.)

2.அ. பறக்கறது, நடக்கறது , சாப்பிடறதுன்னு எத வேணும்னாலும் சொல்லலாம்..

ஆ. ரெண்டுமே ரஜினி நடித்த படங்கள்.

3. பாம்பின் ‘கால்’ பாம்பறியும்.

4. அவன் ‘odd’ பாம்பே விளையாடு பாம்பே என்று வாசித்தான்.

5.name

6. அது தான் ஃபிரிட்ஜீக்குள்ள இருக்கே (பதில் நம்பர் 1 ஐப் பார்க்கவும்)

வரதராஜலு .பூ said...

என்னா கொல வெறீ?

:)

HVL said...

நன்றி வரதராஜலு !

simariba said...

:))))

நல்ல்லாருக்கு....HVL

HVL said...

நன்றி simariba !

சி. கருணாகரசு said...

நகைத்தேன்..... நன்றிங்க.