18.6.10

எழுதாக் கடிதம் . . .


வயதாகிவிட்டது !

உன்னிடம்

எதையும் எதிர்பார்க்கவில்லை,

அன்பைத் தவிர!

எனக்குத் தேவை

பணமல்ல,

உன் காதுகள் மட்டுமே!


பிள்ளையாய் இருக்கையில்

தனித்து விடப்பட்ட கோபம்

உனக்குள் இருக்கலாம்,

தவறில்லை!

என் வேலை மட்டுமே

முக்கியமாய் போனது அப்போது . . .

உன் கான்வென்ட் படிப்பு,

கணினிப் பாடம் என்று

சூழலும் அதற்கு ஒப்பாய்!


வீடு திரும்பையில்

ஆசையுடன்

நண்பனைப் பற்றி

பேச வருவாய் . . .

என் சலிப்பான பதில் கேட்டு

அன்று வாடிய உன் முகம்

நினைவில் பசுமையாய் . . .


இன்று வலிக்கிறது!

உனக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கியிருக்கலாம் . . .


வெற்றுப் பகலில்

சோம்பலாய் ஒற்றைக் காகம் கரையும்

இப்பொழுதினில்

உன் அப்போதைய தனிமை புரிகிறது !


உன் வரவை மட்டுமே கணக்கிட்டு

நகரும் இவ்வாழ்வில்,

சுவை சேர்க்கிறது

உனது வார இறுதி

தொலைப் பேசி அழைப்புகள்.


உதிரப்போகும் கடைசி நாட்களில்

துணையிழந்து நிற்கும்

என் அவசியத் தேவை

உன் அருகாமை மட்டுமே!

8 comments:

vijayan said...

மகன்களெல்லாம் தகப்பன்சாமிகள் அல்லவா,சாமி தப்பை மன்னிக்கும்.

கபிலன் said...

//வெற்றுப் பகலில்
சோம்பலாய் ஒற்றைக் காகம் கரையும்
இப்பொழுதினில் //

//உன் வரவை மட்டுமே கணக்கிட்டு
நகரும் இவ்வாழ்வில்,//


அருமை.
முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

HVL said...

நன்றி கபிலன் !
நன்றி vijayan !

ஜெயந்தி said...

முதுமையின் தனிமையை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

HVL said...

நன்றி ஜெயந்தி!

சி. கருணாகரசு said...

அன்பை சுமக்கும் வலிமையான கவிதை இது.
பாராட்டுக்கள்.

சி. கருணாகரசு said...

கவிதையில் அன்பு, தனிமை, ஏக்கம், ஆற்றாமை, என எத்தனையோ உணர்வுடன்......
பாராட்டுக்கள்.

HVL said...

நன்றி கருணாகரசு !