22.6.10

பிங்கு ‘மானிட்டர்’ ஆன கதை

அப்பா வேலையிலிருந்து ஏழு மணிக்குத் திரும்பினார்.

ஷீவைக் கழட்டும் போது,

“அப்பா! நாந்தான் எங்க க்ளாஸ் மானிட்டர், தெரியுமா?” என்றாள் பிங்கு.

அப்பாவுக்கு ஒரே சந்தோஷம்.

“குழந்தைய மானிட்டராப் போட்டிருக்காங்களாம். பாத்தியா!",
என்று அம்மாவை நோக்கிக் குரல் கொடுத்துவிட்டு,

"புத்திசாலிக் கொழந்ந்த ய்யிது!” என
பிங்குவைக் கிட்டே இழுத்துக் கொஞ்சினார்.

“உண்மையாவா பிங்கு?” - அம்மா.

“ஆமாம்மா!”

ஆனாலும் அம்மாவுக்கு சந்தேகம். சந்தேகத்திற்கான காரணம் பிறகு.

“நான் டீச்சருக்கு போனடிச்சு கேட்பேன்!”

“கேளுங்க!”

“உண்மையா கேட்பேன் பிங்கு! டீச்சர் உன் கிட்ட அப்பிடி சொன்னாங்களா?”

“இல்லம்மா! நீங்க அன்னிக்கு நான் எப்பிடி படிக்கிறேன்னு டீச்சர்ட்ட கேட்டப்ப, நல்லா
படிக்கிறாள்னு தானே சொன்னாங்க! நல்லாப் படிக்கிறவங்க தானே க்ளாஸ்ல மானிட்டர்? "

என்று எதிர்கேள்வி கேட்டுவிட்டு,

"அதனால தான் அப்பிடி சொன்னேன்!” என்றாள்.

ய்ய்ய்யே ய்யப்பா!

அப்பா முகத்தப் பாக்கணுமே!

அம்மாவிற்கு சந்தேகம் வந்ததற்கான காரணம்:

பிங்கு படிப்பது கிண்டர்கார்டன் -2 .அதற்கு மானிட்டர் என்பதே கிடையாது! ஒன்றாம்
வகுப்பிற்கு மேலே தான் இந்த சம்பிரதாயங்கள் எல்லாம்!

2 comments:

கபிலன் said...

குழந்தைகள்.....அறிவுலகம்....தனி அழகு.
பிங்குவுக்கு வாழ்த்துக்கள்.
ஷூ கடையில் மூன்றுவயது மகனுக்கு அளவு பார்த்து....ஒன்றை போட்டு நடக்கச் சொல்லி
எப்படிடா இருக்குன்னு கேட்டா..... சொல்லுது பிள்ளை
" கம்போர்ட்டா இருக்கு"

HVL said...

:):):)
நன்றி கபிலன்!