28.6.10

கோபமும் சமாதானமும் (55 கதை -3)

அண்ணனுடனான பிரச்சனையில் கோபித்துக் கொண்டு கிளம்பியவன் இன்னமும் வீடு திரும்பவில்லை.
ஊரெல்லாம் தேடிக் கொண்டிருந்தாள் பாட்டி.

வெயில் அவளுக்கு களைப்பை ஏற்படுத்தியது. இருந்தும், தடியை அழுத்தமாய் ஊன்றி நகர்ந்துக் கொண்டிருந்தாள்.

இதோ... ஊரையொட்டிய மலையடிவாரத்தை அடைந்து விட்டாள்.
அவன் இங்கே தான் இருக்க வேண்டுமென்பது அவள் ஊகம்.
கையை கண்களுக்கு அண்டை கொடுத்து, மெல்ல தலையை உயர்த்தி, மலையுச்சியைப் பார்த்தாள்.

அங்கே தண்டி, கோவணத்தோடு ஆண்டியாய் நின்றிருந்தான் முருகன். “ஞானப் பழத்தைப் பிழிந்து” எனத் தொடங்கினாள் ஔவை.(55 கதைகள் பற்றிய அறிமுகம் இங்கே
http://rithikadarshini.blogspot.com/2010/06/55.html)

3 comments:

கபிலன் said...

ஒன்னும் சொல்றதுக்கு இல்லங்க...
எப்படித்தான் யோசிக்கிறீங்களோ?
நல்லா சிரிச்சேன்...

HVL said...

வாங்க கபிலன். உங்க கருத்துக்கு மிக்க நன்றி.

கபிலன் said...

அசந்து...மறந்து...நம்ம வகுப்புக்குள்ள போயிராதீங்க.....
அங்க ஒரு ரத்தக்களறியே நடந்துருக்கு....
வராமலா போயிருவீங்க.....
வாங்க....நன்றி.