9.7.10

தயக்கம்

ஊருக்குத் திரும்பும் நேரம் வந்துவிட்டது. என்ன தான் வெளிநாட்டில் தங்கி இருந்தாலும், வேர்கள் மண்ணை நோக்கியே இழுக்கின்றன. ஜு.வி, செய்திகள் மற்றும் உறவினர்கள் மூலமாய் மட்டுமே, கடந்த சில வருடங்களாய் ஊரை அறிந்திருப்பதால், இந்தியா எப்படி இருக்கிறது என்ற கவலை ஏற்படுகிறது. நான் விட்டு வந்தது போல இல்லை என்று மட்டும் புரிகிறது.

பள்ளியைப் பற்றி, என் முகம் பார்த்து கேள்வி எழுப்பும் பிள்ளைகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.
‘அங்கெல்லாம் ஆசிரியர்கள் கொஞ்சம் மண்ணைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, தப்பு செய்தால் அதைக் விரலிடுக்கில் எடுத்துக் கொண்டு தொடையில் திருகுவார்களாமே?’
என்று கேட்கும் சின்னவளை என்ன சொல்லி சமாளிப்பது!
நானே அறிந்திராத இது போன்ற தண்டனைகள், அவள் காதுகளுக்கு எப்படி வந்தன என்று புரியவில்லை.
பள்ளிப் பாடங்களை பிள்ளைகளால் சமாளிக்க முடியுமா, என்பது மட்டுமே என் பயம்.

இதெல்லாம் அருவியில் குளிப்பதற்கு முன் ஏற்படும் தயக்கத்தைப் போன்றது . தண்ணீரில் நனைந்தவுடன் தெளிந்து போகக் கூடும். நல்லதையே எதிர்பார்க்கிறேன்.

5 comments:

Thekkikattan|தெகா said...

There is nothing to worry about, kids will get adapted to any environment pretty comfortably than we think...

சி. கருணாகரசு said...

மாற்றம் நிச்சயம் தான்... ஆனா நீங்க சொல்லுற அந்த தண்டனையெல்லாம்.... வெகு காலத்திற்கு முன்னாடி.
இப்பவெல்லாம் எவ்வளவோ மறியாச்சி.

பிறந்தகம் செல்லும் உங்கலுக்கும் குடுப்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்.

HVL said...

நன்றி சி. கருணாகரசு ,Thekkikattan.

கபிலன் said...

ஆஹா...நல்ல விஷயம்..
என்னதான் குறைகள் இருந்தாலும்...
நமூரில் வளரும் குழந்தைகள்...அதிர்ஷ்டசாலிகள்....
பின்னாளில் உணருவார்கள்.....
மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்...

அன்புடன் கபிலன்

HVL said...

நன்றி கபிலன்!