25.11.10

தூக்கம் தொலைந்த இரவுஅமைதியைக் கிழித்து
அலறிய போது
நள்ளிரவு . . .

தொலைந்து போன
கனவின் விளிம்பில்
தூக்கம் கலைத்து

வினாடிக்கும் குறைவாய்
திடுக்கிட வைத்து

வயதான அம்மா
பக்கவாத அப்பா
வேகமாய்
வாகனமோட்டும் தம்பி
யு.எஸ் அக்கா

இவர்களை அரைநொடியில்
கண்முன் நிறுத்தி
ஓய்ந்தது . . .

மர்ம முடிச்சை அவிழ்ப்பதில்
கடந்தது பின்னிரவு

3 comments:

பத்மா said...

மன அவஸ்தை

HVL said...

உங்கள் கருத்துக்கு நன்றி பத்மா!

goma said...

அந்த மணியோசைக்குப் பின் வரும் மணித்துளிகள்...விழிகளுக்கும் மனதுக்கும் தூக்கம் கெட்ட பொழுதுகள்