11.12.10

அழுகைக்குப் பின்
அழுவதும் நன்றாய் தான் இருக்கிறது
தலைக்கு மேல் வெள்ளம்
சென்ற பின்
செய்ய ஏதுமின்றி
மனதின் துக்கம் முழுவது
கண்களின் வழி வெளியேறுவது
நன்றாய் தான் இருக்கிறது

அதன் பின்
எதையும் தாங்க தயாராகும்
மனம்
தாங்கொன்னா துயரையும்
தள்ளி நின்று பார்த்தபடி,
அனுபவக் குறிப்பில்
மேலும் ஒரு சம்பவத்தை
ஏற்றிக் கொள்கிறது

6 comments:

பத்மா said...

very true

HVL said...

உங்கள் கருத்துக்கு நன்றி பத்மா

மதுரை சரவணன் said...

//அதன் பின்
எதையும் தாங்க தயாராகும்
மனம்//
arumai. வாழ்த்துக்கள்.

HVL said...

நன்றி சரவணன்!

Charu said...

hmm true

goma said...

அனுபவ வரிகள் கன்னத்தில் வடிகின்றன..