15.12.10

கடுஞ்சொல்
விரும்பத்தகாத வார்த்தைகளை

சொல்லியே தீரவேண்டியிருக்கிறது

சில நேரங்களில் . . .


அடிவயிற்றில் தொடங்கி

மனதிற்குள்ளே உருண்டு

தொண்டைக் குழிக்குள் சிக்கி

வேகமான மூச்சுக்காற்றால் மட்டுமே

கோர்க்கப்பட்ட சொற்கள்

சிதறித் தெறிக்கின்றன

பொறுமை எல்லைமீறிய

ஒருநாளில் . . .


விரும்பத்தகாத வார்த்தைகளை

சொல்லியே தீரவேண்டியிருக்கிறது

அப்பொழுது . . .


அதன்பின்

மனதின்

ஏதோவோர் மூலையில்

ஏற்படும்

வலியை மட்டும்

ஒதுக்கித் தள்ள

முடிந்ததில்லை

4 comments:

அரசன் said...

உண்மையான வரிகள்...
நல்லா இருக்கு

Charu said...

Nicely thought and well said!

ஸ்ரீராம். said...

கஷ்டம்தான்....

goma said...

சொல்லித்தீர வேண்டிய விஷயங்களை அடி மனதிலோ ஆழ்மனதிலோ நா நுனியிலோ தேக்காதீர்கள்....மனம் மாசு படும்
சொல்லிவிடுங்கள் மன உளைச்சலிலிருந்து விடுபடுங்கள்.
அடுத்தவர் மனம் நோகக் கூடாதென்ரு நம் மனதை நோகடிக்க வேண்டாம்