1.1.11

மீண்டும் ஒரு புதிய ஆண்டு


புத்தாண்டு பிறந்துவிட்டது. வசந்தமும், ஆஸ்ட்ரோவும் இணைந்து வழங்கிய நிகழ்ச்சியைப் பார்த்தோம். நள்ளிரவு மணி பன்னிரெண்டை நெருங்க நெருங்க கொண்டாட்டங்கள் உச்சத்தை அடைந்தன. இன்னும் இருபது நிமிடத்தில் வருகிறது, இன்னும் பத்து நிமிடத்தில் வருகிறது என்று கட்டியம் கூறிக் கொண்டே பாட்டுப் பாடி நடனம் ஆடினார்கள், கலைஞர்கள்.

சரியாய் 12 மணிக்கு கலர் பேப்பர்கள் பறக்க சத்தமாய் கத்தியபடி, புத்தாண்டு வாழ்த்து சொன்னார்கள். பிறகு அலைபாயுதே படத்தை போட்டுவிட்டு அனைவரும் பார்ட்டிக்கோ, இல்லை எங்களைப் போல தூங்குவதற்கோ சென்று விட்டார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி அந்த ஆண்டிற்கான சபதங்களை மறக்காமல் எடுத்துக் கொண்டு, இரண்டு நாட்களில் மறந்து போகிறேன்.

ஏறக்குறைய இப்படித் தான் ஒவ்வொரு புத்தாண்டும் வந்து போகிறது.

இந்த ஆண்டு, குழந்தை கிறுக்கித் தள்ளிய பேப்பரைப் போல வாழ்கையில் பல திருப்பங்கள். 2010 எனக்கு பல சோதனைகளை ஏற்படுத்தியிருந்தாலும், தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது.

எனக்கு வந்த ஒரு வாழ்த்து:


ஜனவரி 1 2011ல நாங்க


உங்க வீட்டுக்கு வருவோம்.

வந்து பர்மனென்ட்டா

உங்க வீட்டுலேயே

தங்கப் போறோம்.

எங்களோட பேர்:

சந்தோஷம்,

நிம்மதி,

வெற்றி.

உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

3 comments:

ஸ்ரீராம். said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

HVL said...

நன்றி ஸ்ரீராம்.

goma said...

சந்தோஷம்,

நிம்மதி,

வெற்றி.

வாங்கோ வாங்கோ வந்து தாராளமா தங்குங்க.....
ஆமா எல்லார் வீட்டிலும் எப்படி ஒரேடியா தங்குவீங்க....

எல்லோரையும் சந்தோஷப் படுத்த நினைக்கும் நல்லவர்களுக்கு எதுவும் சாத்தியமே...