22.1.11

நிகழ்வுநிகழ்ந்தாக வேண்டிய

சம்பவம் ஒன்று


அரங்கேறாது நாள் கடத்தி

சம்பவிக்கும் நேரத்தை

மறைபொருளாய் ஒளித்து

அந்தரங்கம் காக்கும் மர்மியாய்

அற்பமானதை பருப்பித்து

அறியவியலா இரகசியத்தை

உள்ளங்கையில் மறைத்து

விரலிடுக்கில் கசியவிடும்

சிறுமியாய் பிகுசெய்து


பின்

மர்மப்படத்தின்

இறுதிக் கட்டம் போல்

மெல்ல முடிச்சவிழ்ந்து

நிகழ்ந்து முடிகிறது.

5 comments:

ஸ்ரீராம். said...

என்னங்க அது..?

//"அந்தரங்கம் காக்கும் மர்மியாய்"//

மாமியாய் என்று முதலில் படித்துக் குழம்பிப் போனேன்! மர்மியா...புது வார்த்தை.

HVL said...

@ஸ்ரீராம்

மர்மி - இரகசியத்தை வெளியிடாதவன் http://www.thamilworld.com/forum/index.php?showtopic=10375

Charu said...

good one and "marmi" is a new word to me too!

பத்மா said...

முழுமையான கவிதை படித்த உணர்வு ..
நன்று

HVL said...

@பத்மா, charu
மிக்க நன்றி.