2.2.11

நானும் எனது நட்பும்நட்பிற்கான எனது இலக்கணம் மிகவும் எளிமையானது.

எதையும் எதிர்பாக்காதே என்பது தான் அது.

நான் இதை இம்மி பிசகாமல் கடைபிடிக்கிறேன். என்னால் முடிந்த வரை உதவி செய்கிறேன். முடியாவிட்டால் அதை முகத்திற்கு நேரே சொல்லிவிடுகிறேன். எதிர்பார்த்து எதையும் செய்வதில்லை.

உதவி செய்கிறேனோ இல்லையோ உபத்திரவம் கொடுப்பதில்லை. நட்பின் நிமித்தம் உபத்திரப்படுத்திக் கொள்வதும் இல்லை. விருப்பு வெறுப்புகளை என்மீது சுமத்துபவர்களை தயங்காமல் வெட்டிவிடுகிறேன்.

என் தோழிகளை குறை நிறைகளோடு அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். என்ன! எனக்கு பிடிக்காத, ஒத்துவராத விஷயங்களிலிருந்து, அந்த நேரம் மட்டும், விலகியிருக்கிறேன்.

இது பிடிக்காமல் முறித்துக் கொண்டு செல்பவர்களை புரிந்துக் கொள்ள முடிகிறது. அதிலும் வெளிப்படையாக சொல்லிப் பிரிபவர்களை மதிக்கிறேன். அவர்களின் செயலுக்காக கோபமோ, கவலையோ படுவதில்லை. படுவதற்கு என்னிடம் இதைவிட முக்கியமான, தலைபோகக்கூடிய முகாந்திரங்கள் நிறைய இருக்கின்றன.

இத்தகு காரணாங்களால் எனது நட்பு வட்டத்தின் விட்டம் மிகவும் குறைவு. ‘Quality is important than Quantity’ இல்லையா?

எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்
எது இன்று உன்னுடையதோ,அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்


என்பதை உறுதியாய் நம்புகிறேன்.

4 comments:

ஸ்ரீராம். said...

நல்ல கருத்துகள். ஏதும் சமீப அனுபவமா...தனக்குத் தானே ஏதோ சமாதானம் செய்து கொள்வது போல....

Charu said...

Yes, you are right!

பயணமும் எண்ணங்களும் said...

படுவதற்கு என்னிடம் இதைவிட முக்கியமான, தலைபோகக்கூடிய முகாந்திரங்கள் நிறைய இருக்கின்றன.//

மிக சரி.. இதுவே என் எண்ணமும் எப்போதும்...

சந்தோஷப்படவும் , துக்கப்படவும் ஆயிரம் காரணமுண்டு..

HVL said...

நன்றி ஸ்ரீராம், charu, பயணங்களும் எண்ணங்களும்.