4.2.11

அப்படி என்ன தான் இருக்கிறது 'விஜய்'யிடம்!

வசந்தத்தில் இந்த குருவி படத்தை எத்தனை முறை தான் போடுவார்களோ தெரியவில்லை. எனக்கு தெரிந்து இது மூன்றாவது முறையோ, நான்காவது முறையோ. ஏதாவது ஒரு வசனம் மறந்து போனால் மறக்காமல் திரையிட்டு விடுகிறார்கள்.

தவறாமல் பார்க்கிறாள் என் குட்டிப் பெண். அதற்காக குட்டிக்கரணம் போடவும் தயாராய் இருக்கிறாள். அப்படி என்ன தான் இருக்கிறது படத்தில். அவளைக் கேட்டால் விஜய் என்கிறாள்.

ஒரு முறை தமிழ் கதை ஒன்றை சேர்ந்து படித்தோம். அந்த கதையில் அவளுக்கு பிடித்த கதாபாத்திரத்தின் பெயரை எழுதச் சொன்னேன். கதாபாத்திரம்ன்னா என்ன என்று அவள் கேட்க, ‘character’ என்று மொழி பெயர்த்தேன். என்ன புரிந்ததோ அவள் எழுதியது இதைத் தான்.

‘விஜெ’

நான் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை.

அப்படி என்ன தான் இருக்கிறதோ 'விஜய்'யிடம்!

5 comments:

Charu said...

haha :-)

ப்ரியமுடன் வசந்த் said...

அதானுங்க விஜய் :)))

HVL said...

நன்றி வசந்த், Charu.

ஸ்ரீராம். said...

அந்தந்த காலகட்டங்களில் ஒவ்வொரு நடிகரிடம் உள்ள கரிஸ்மா...இப்போது விஜய்!

HVL said...

@ ஸ்ரீராம்
இந்தப் பதிவில் இதைக் கண்கூடாகப் பார்த்தேன். வழக்கத்தை விட அதிகம் பேர் இந்தப் பதிவைப் படித்திருக்கிறார்கள். இதற்கு காரணம் இந்த பதிவின் தலைப்பே என்று தெரிகிறது.