28.2.11

நாய்க்கு வேலையில்ல நிக்க நேரமும் இல்ல

வேலையென்று சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவும் இல்லை தான். ஆனாலும் எழுத முடியாதபடி குறுகிடுவதற்கு, அதிலும் முக்கியமாய் பெண்களுக்கு, நிறைய அனானி வேலைகள் இருக்கின்றன. பிள்ளைகளை சமாளிப்பது, கிளப்பி பள்ளிக்கு அனுப்புவது, படிப்பிப்பது, வீட்டை சுத்தம் செய்வது, சமைப்பது (குறைந்த பட்சம் இரண்டு வேளைக்கு), கடையிலிருந்து தேவையானவற்றை வாங்கி வருவது, இப்படி எக்ஸெட்ராவுக்குள் அடக்க முடியாத வேலைகள் பல மனைவிகளுக்காக காத்துக் கொண்டே இருக்கின்றன.

‘வீட்டில வெட்டியாய் உட்கார்ந்துக் கொண்டு என்னத்த கிழிக்கிற?’ என்ற கணவனின் கேள்விக்கு பதிலாய் சொல்ல முடியாத வேலைகள் இவை. சில நாட்களில் ஏனென்று புரிந்துக் கொள்ளமுடியாதபடிக்கு, இவை வழக்கத்திற்கும் அதிகமாய் நேரத்தை ஆக்கிரமிக்கின்றன. அது போன்ற சில நாட்களில் இப்போது மாட்டிக் கொண்டிருக்கிறேன். அதையே மின்னல் வேகத்தில் பதிவிட்டுவிட்டு, அடுத்த வேலையை கவனிக்க சென்று கொண்டிருக்கிறேன்.

6 comments:

bandhu said...

I can fully understand. I sympathize with my wife.

HVL said...

நன்றி bandthu

Anonymous said...

எல்லா பக்கமும் இதே மழை தான், என்ன செய்றது?

ஸ்ரீராம். said...

கஷ்டம்தான்....

HVL said...

நன்றி "குறட்டை " புலி , ஸ்ரீராம்.

goma said...

அம்மா மின்னல் வாம்மா ,
மின்னல் வேகமானாலும் சொல்ல வேண்டியதை ரத்ன சுருக்கமாகக் கொட்டி விட்டீர்கள்