13.3.11

இனிய குழந்தைக்கு . . .சம்பவங்கள் கைமீறிப் போகும்
சிலசமயம் உன்னை
திட்டி தான் விடுகிறேன்!

அறிவுக்கு எட்டுவதை
மனத்திற்குள் போகவிடாமல்
செய்கிறது கோபம்.
அதன் தாக்கத்தால் விளையும்
மன அழுத்தத்தை
உன்மேல் சுமத்தி
கடுமையாய் தான்
பேசி விடுகிறேன்!

பிறகு தான் உணர்கிறேன்
தவறு
என்னுடையது என்பதையும்,
அது தெரிந்தும்
உன்னால் என்னை
எதிர்க்க முடியவில்லை
என்பதையும்,
இந்த உன் பலவீனத்தை
தவறாமல்
பயன்படுத்திக் கொள்கிறேன்
என்பதையும். . .


இனி இப்படி செய்வதில்லை
என்ற வைராக்கியம்
அந்த நொடி பிறக்கிறது!
இந்த முறையேனும் அதை
கண்டிப்பாய் நினைவில்
இருத்திக் கொள்வேன்!


5 comments:

Anonymous said...

ஒவ்வொரு பெற்றோரும் படிக்கவேண்டிய கவிதை

வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

பாசக் கவிதையா...

HVL said...

Thanks she-nisi!

வாங்க, ஸ்ரீராம்!

goma said...

”....உன் வயிற்றில் 10 மாதம் இடம் கொடுத்தாய் ...உன் கோபங்களை நான் தங்கிக் கொள்ள மாட்டேனா ...”என்று குழந்தை கூறுவதாக கற்பனை செய்து பார்த்தால் ,கோபம யார் மேல் காட்ட வேண்டுமோ ,அவர்கள் பக்கம் சரியான திசையில் திரும்பி விடும்.

Anonymous said...

Dear Goma...

Your words make me to think about me and how to react if my mum get angry at me.

Thanks

J