17.3.11

நிறைய பின்னூட்டங்கள் பெறுவதற்கு சில யோசனைகள்

நம் பதிவுகளை யாரோ படிக்கிறார்கள் என்பதே மகிழ்ச்சிக்குரிய செய்தி. படித்தவர்கள் பின்னூட்டம் இட்டால் மிக்க மகிழ்ச்சி. ஆனால் பின்னூட்டமே இடாதவர்களை காலரைப் பிடித்து இழுத்தா போட வைக்க முடியும்? சிலருக்கு என்னதான் கஷ்டப்பட்டு எழுதினாலும் spam கமெண்ட் கூட கிடைப்பதில்லை. என்ன செய்வது?

இப்படி சில முயற்சிகளை வேண்டுமானால் செய்து பார்க்கலாம்

1.சுண்டி இழுப்பது போன்ற தலைப்புகள் கொடுக்கலாம்.
எ.கா : ‘2011ல் விஜய் முதலமைச்சர்’ என்று கிக்காக ஆரம்பித்து ‘ஆவாரா?’ என்று தினத்தந்தி பானியில் முடிக்கலாம். (அதென்னவோ விஜய்ன்னு தலைப்புல போட்டா அன்னைக்கு கவுண்ட் எகிறுது.)

2. பிரபல பதிவர்களின் பதிவுகளில் பின்னூட்டமிட்டு சந்தடி சாக்கில் நமது ப்ளாக்கையும் பிரபலப் படுத்திக் கொள்ளலாம்.

3. பின்னூட்டம் குறைவாய் இருக்கும், பிரபலமில்லாத பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்கள் நன்றியுடன் இடும் பின்னூட்டங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

4.முடிந்தால் நண்பர்களை ப்ளாக் தொடங்கச் சொல்லி ஊக்கப்படுத்தி, அவர்களின் மூலம் பின்னூட்டங்களைப் பெருக்கலாம்.

5.சும்மா இருக்கும் நேரமெல்லாம், பலன் கருதாமல், அடுத்தவர்களுக்கு பின்னூட்டம் இடலாம். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

6. இது போல உங்களுக்கு தெரிந்த வழிவகைகளை பின்னூட்டங்களில் சொல்லலாம்
- போன்ற வாக்கியங்களைப் பயன்படுத்தலாம்.

7. இது எதுவுமே வர்க் அவுட் ஆகவில்லையா! நோ ப்ராப்ளம்! பிற்காலத்தில் நாம் சுஜாதா ரேஞ்சுக்கு பிரபலமாகும் போது, ‘இவரை எனக்கு முதலிலிருந்தே தெரியும்’ என்று சொல்லும் மிகப் பெரிய வாய்ப்பை அவர் (பின்னூட்டமிடாமல் செல்பவர்) இழக்கிறார். கண்டிப்பாய் பின்னால் வருந்துவார். அதை நினைத்து அவருக்காக அவரை மன்னித்து விடுவோம்.

நன்றி.

9 comments:

Srividhyamohan said...
This comment has been removed by the author.
Anonymous said...

Sorry. Ennoda blog link kudukka marandhutten. Pls visit here.

http://naaradhar.blogspot.com/

HVL said...

மிக்க நன்றி ஸ்ரீவித்யா மோகன்.
தமிழில் எழுத e-kalappai பயன்படுத்துகிறேன்.

ஸ்ரீராம். said...

நன்றி!

goma said...

கீதையின் வாசகத்தை அழகாக முகப்பில் பளிச்சென பதிவிட்டிருக்கிறீர்கள்.....
”யார் வந்தார்களோ ,அவர்கள் நன்றாகவே வந்தார்கள் ,பின்னூட்டம் யார் போட்டார்களோ அவர்கள் நன்றாகவே போட்டார்கள்...அவர்கள் காலர் நாளை உங்கள் காலராகலாம்....

HVL said...

//”யார் வந்தார்களோ ,அவர்கள் நன்றாகவே வந்தார்கள் ,பின்னூட்டம் யார் போட்டார்களோ அவர்கள் நன்றாகவே போட்டார்கள்...அவர்கள் காலர் நாளை உங்கள் காலராகலாம்....
//
:):):)மிக்க நன்றி goma.

Lakshmi said...

பரவால்லையே பின்னூட்டம் இடுவதில்
கூட இத்தனை நெளிவு சுளிவுகள் இருக்கா? பேஷ், பேஷ் நல்லா இருக்கு.

Lakshmi said...

பரவால்லையே பின்னூட்டம் இடுவதில்
கூட இத்தனை நெளிவு சுளிவுகள் இருக்கா? பேஷ், பேஷ் நல்லா இருக்கு.

Lakshmi said...

பரவால்லையே பின்னூட்டம் இடுவதில்
கூட இத்தனை நெளிவு சுளிவுகள் இருக்கா? பேஷ், பேஷ் நல்லா இருக்கு.