7.4.11

தொலை(யாத)பேசி எண்கள்

அன்று விரைவு ரயிலில் சென்றுக் கொண்டிருந்தேன். ரயிலினுள் நின்றுக்கொண்டிருந்த நேரத்தில் எதையாவது செய்ய மனம் பரபரத்தது.

கூட்ட நெரிசல். இந்தக் கூட்டத்தில் புத்தகம் படிப்பதற்கு என்னவோ போல இருந்தது. செல்போனில் கேம் விளையாடி பழக்கமில்லை. அதனால் அதனுள் இருக்கும் விஷயங்களை ஆராயலாம் என்று கொஞ்சம் தோண்டினேன். ‘contacts’ பகுதி சிக்கியது.

சற்று நேரம் கிளறிப் பார்த்ததில், தொடர்பிலிருக்கும் எண்களை விட தேவைற்ற எண்களையே அதிகம் பாதுகாத்து வைத்திருக்கிறேன் என்று தெரிந்தது.

என்னிடமிருந்த எண்களை கீழ்கண்ட வகைகளாக என்னால் பகுக்க முடிந்தது.

1.என் தோழிகள் மற்றும் உறவினர்களின் எண்கள்

2.என் வேலை தொடர்பிலான எண்கள்

3.நான் வேலைக்கு விண்ணப்பித்த போது அது சம்பந்தமாய் சேகரித்து வைத்த எண்கள். எப்போதாவது தேவைப்படலாம் என்ற தொலைநோக்குப் பார்வையில் இன்னமும் போனிலேயே இருக்கிறது.

4.அத்தியாவசியத் தேவைகளுக்காக பதிவு செய்யப்பட்ட எண்கள். அதாவது போலீஸ், Gas, ஸ்டார் ஹப் போன்றவற்றின் எண்கள்.

5.தொடர்பிலில்லாத மற்றும் தொடர்பை வெட்டிக் கொண்டவர்களின் எண்கள். இவற்றை ஏன் இன்னமும் வைத்திருக்கிறேன் என்று புரியாமல் வைத்திருக்கிறேன்.

இவற்றுடன்

அ. நான்கு மாதங்களுக்கு முன் இண்டர்வ்யூவிற்கு பலமுறை என்னை அழைத்து வரசொல்லிவிட்டு, தானும் வராமல் இன்று வரை அதற்கான காரணத்தையும் சொல்லாமல் விட்ட ஜேனட்டின் நம்பரையும்

ஆ. வாடகைக்கு அறை பார்க்க வருவதாய் சத்தியம் பண்ணிவிட்டு, வராமல் ஏமாற்றி, போன் செய்த பிறகு வரமுடியாது என்று கூறிய ஐஸ்வரியாவின் நம்பரையும், போன் செய்ததற்கு பதிலே அளிக்காத ராஜீவ் பிரசாத்தின் நம்பரையும் வைத்திருக்கிறேன்,
என்றாவது ஒரு நாள் வசமாய் மாட்டுவார்கள் என்ற நம்பிக்கையுடன்.

என் அனுபவத்தில் இது போன்ற நம்பிக்கைகள் வீண் போனதில்லை.

இவற்றில் இல்லாதது, பழைய போன் பழுதடைந்ததால் கைவிட்டு போன தோழியின் தொலைபேசி எண். அவர் என்னை அழைப்பதற்காக இன்னமும் காத்திருக்கிறேன். இந்த முறை எல்லா எண்களையும் முன்பே பத்திரப்படுத்தி விட்டேன்.

7 comments:

Charu said...

After reading this blog, I realised that I haven't cleaned my conatacts list for more than an year. Removed 40 contacts finally :-)

ஸ்ரீராம். said...

சில சமயம் தேவை இல்லாத எண்கள் என்று அழித்த பிறகு அவ்வளவு நாட்களுக்குப் பிறகு அதன் தேவை திடீர் என வரும். எனக்கு அது மாதிரி அனுபவம் உண்டு. நானும் எடுத்துப் பார்க்க வேண்டும்!

Lakshmi said...

nammil palarum ippatiththaan veentaatha kaantaakt namparkaLai telit paNNaamalee vaiththiruppoom poola irukku.

HVL said...

நன்றி charu.

HVL said...

@ஸ்ரீராம்
//சில சமயம் தேவை இல்லாத எண்கள் என்று அழித்த பிறகு
அவ்வளவு நாட்களுக்குப் பிறகு அதன் தேவை திடீர் என வரும்.//

இப்படி யோசித்து தான் இன்னமும் இவ்வளவு எண்கள் என்னிடம் இருக்கின்றன.

உங்கள் கருத்துக்கு நன்றி.

HVL said...

@lakshmi
ஓ. . . நீங்களும் இப்படி தானா!

உங்கள் கருத்துக்கு நன்றி.

எல் கே said...

கணினியில் டவுன்லோட் செய்து அதில் எல்லோர் காண்டேக்ட்டும் வைத்திருக்கிறேன். அலைப்பேசியில் தொடர்பிலிருக்கும் நண்பர்கள், அலுவலகம் சம்பந்தப்பட்ட எண்கள் மற்றும் உறவினர் எண் மட்டும்தான். அதுவும் நண்பர் என்றால் அவர்கள் பெயருக்கு முன் எந்த வகையில் என்று இருக்கும் காலேஜ் /ப்ளாக் இப்படி. அதே போல் அலுவலகத்திற்கும் . எளிதாக இருக்கிறது தேட