14.5.11

தேர்தலும் தலைகீழ் பூனையும்சுஜாதா தனது புதிய நீதிக்கதைகள் என்ற புத்தகத்தில் இப்படி ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்.

ஒரு வயசான பூனை, சாப்பிட ஒன்றும் கிடைக்காமல் வருத்ததுடன் இருக்கிறது.
திடீரென்று அதற்கு ஒரு யோசனை தோன்றுகிறது.

தன் பின்னங்கால்களை சேர்த்து கட்டிக் கொண்டு ஆணியிலிருந்து தலை கீழே தொங்கினால், பூனைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பரிதாபப்பட்டு, எலிகள் கிட்டே வரும்.
அதை பிடித்து தின்றுவிட்டு மறுபடி தலைகீழே தொங்கலாம் என்று திட்டம் போடுகிறது.

திட்டப்படி கிழிந்த பனியனால் காலைக் கட்டிக் கொண்டு ஆணியிலிருந்து தொங்குகிறது.
அது பார்க்க ஒரு பை போல தோற்றமளிக்கிறது.
அதைப் பார்த்து அதிசயித்து போன ஒரு எலி தன் தலைவனிடம் ஓடிப் போய் சொல்கிறது.

எலியின் தலைவன் வந்து பார்த்துவிட்டு
" எலிகளா! நாம் எத்தனையோ பைகள் சுவற்றிலே தொங்குவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அடிப்பாகத்தில் பூனைத் தலை வைத்த பையைப் பார்த்திருக்கிறோமா?" என்ற கேள்வியை எழுப்பி அனைவரையும் எச்சரிக்கிறது.

இதற்கு அவர் சொன்ன நீதி"ஒரு முறை ஏமாந்தவர்கள் மறுமுறை ஏமாற நடுவில் இரண்டு தேர்தல்கள் கடந்திருக்க வேண்டும்"

3 comments:

ஸ்ரீராம். said...

அனுபவங்கள் கற்றுத் தரும் பாடங்கள்....,ஒரு நாள் தெனாலிராமன் வளர்த்த பூனைக் கதை ஆகி பாலை சுவைக்கவே பயம் வரும்!

HVL said...

கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்!

Lakshmi said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம்
கிடைக்கும் போது பாருங்கோ.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_9552.html