29.6.11

உண்மையான நண்பன்எதிர்பார்ப்பின்றி எதையும் செய்பவன்,

ஆபத்து வேளைகளில்

கேட்காமலேயே உதவுபவன் ,

தோல்விகளில் ஊக்கம் கொடுப்பவன்,

பொய்யாய் புகழாதவன். . .


நீங்கள் சொல்வதை

பிறரிடம் சொல்லி சிரிக்காதவன்,

உங்களை நீங்களே

உயர்வாய் எண்ணும்படி செய்பவன்,

உங்கள் முன்னேற்றத்தில்

பொறாமையின்றி சந்தோஷப்படுபவன் . . .


எவனுடன் இருக்கும் போது

இறகைவிட லேசாய் உணர்கிறீர்களோ,

எவனிடம் தைரியமாய்

உங்கள் கருத்துகளைச்

சொல்ல முடிகிறதோ,

அவனே உங்கள் உண்மையான நண்பன்பிறருக்கு எதிரியாய் இருந்தாலும்

ஊர்கூடி அவனைத் தூற்றினாலும்

துரியோதனனைப் போல

அதர்மவானாய் இருந்தாலும்

அவன் மட்டுமே

உங்களுடைய உண்மையான நண்பன்


4 comments:

ஸ்ரீராம். said...

நாய்களிடம் மட்டும்தான் இப்படி எல்லாம் எதிர்பார்க்கலாம் என்றும் சொல்லலாம். என்று ஆனால் அவனுக்கு வருத்தம் மட்டும் இல்லை சந்தோஷமும் கிடையாது!

நட்பின் மென்மை கவிதையில்.

அம்பாளடியாள் said...

அருமையான கருத்து.இப்போது
இப்படி வாழ்பவர்கள் மிக மிக அரிது.
ஆனால் கிடைத்தால் சொல்லி வேலை இல்ல.
பகிர்வுக்கு மிக்க நன்றி...............

HVL said...

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி அம்பாளடியாள் மற்றும் ஸ்ரீராம்.

Charu said...

good one...