31.7.11

நாங்க எப்பவும் இப்படி தான்!

எல்லோர் வீட்டிலும் இருப்பது போல

என் பிள்ளைகளுக்குள்ளும் சண்டை வருவது சகஜம்.


எல்லாம் நன்றாய் தான் ஆரம்பமாகும்!

அக்கா- தங்கையாய், நண்பர்களாய், கடைக்கார- வாடிக்கையாள ராய், ஆசிரிய-மாணாவ ராய், மாறி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.


திடீரென்று தாங்கள் ஏற்றுக் கொண்ட

கதாபாத்திரத்தின் தன்மையினாலோ,

அல்லது தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினாலோ

சூழ்நிலையில் கணம் ஏறும்.


மெதுவாய் பேசிக் கொண்டே இருப்பவர்களின் தொனி

மெல்ல மெல்ல உயரும்.

கொஞ்ச கொஞ்சமாய் சிதற ஆரம்பிக்கும்

விளையாட்டு சாமான்கள், பின்

மூலைக்கொன்றாய் பறக்கும்.


சமாதானம் செய்யலாம் என்று

உள்ளே நுழைந்தால்

குந்தவையும் நந்தினியுமாய் இருந்தவர்கள், சட்டென்று

குந்தவையும் வானதியுமாய் மாறிவிடுவார்கள்.

ஆபத்து நம் மூக்கிற்கு தான்!

சண்டை கூட விளையாட்டின் ஒரு பகுதி போல!

அதெல்லாம் நமக்கெங்கே தெரிகிறது?இன்று பார்த்தால் அதிசயமாய்

ஒருவரை ஒருவர்

கன்னத்தை
பிடித்தபடி

கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.


‘என் செல்லோஓஓம்! என் தங்கோஓஓம்!’ என்று ராகத்தோடு

சொல்லிக் கொண்டிருந்தாள் பிங்கு.


“என்னது அதிசயமா இருக்கு!

சண்டை போடாம கொஞ்சிகிட்டு இருக்கீங்க?”

என்று நான் கேட்டதற்கு,


“நீங்க வேற பிங்கு என் கன்னத்தை

கிள்ளறதால நான் திருப்பி கிள்ளறேன்.

அவள முதல்ல விடச் சொல்லுங்க நான் விடறேன்!” என்கிறாள் பெரியவள்.


இந்த காலத்து பிள்ளைங்க

எப்படியெல்லாம் சண்டைப் போடறாங்க!


__________________________________________________


பிங்குவிற்கு ஐந்து வயதிருக்கும் போது அவளை

"என்ன வேலைக்கு போக பிடிக்கும்?" என்று கேட்டால்,

"காலைல போலீஸ்,

மதியம் டீச்சர்,

நைட் அஸ்ட்ரா னட்" என்பாள்.


காலை மற்றும் மதிய வேலைகள்

அவ்வப்போது மூடிற்கேற்றவாறு மாறும்.


ஆனால் நைட் மட்டும் கண்டிப்பாய்

அஸ்ட்ரானட் தான்.

ஏன் அப்படி என்று கேட்டால்,

நைட்ல தான் நிலா வருமாம்!

அப்போ தான் நிலாவுக்கு போக முடியுமாம்!

சரி தான்!!!!!!!!!!!

16.7.11

ஆண்களுக்கென்று தனி சீட் . . .

ரொம்ப நாட்களாய் சில சந்தேகங்கள் என்னைக் குடைந்தபடியே இருக்கின்றன. அவற்றில் சில இங்கே . . .

சந்தேகம் நம்பர் 1:


ரயிலில் ஜெனரல் கம்பார்ட்மென்ட் உட்பட

அனைத்து பெட்டிகளிலும் பெண்கள் ஏறலாம்.

யாரும், லேடீஸ் பெட்டிக்குச் செல்லுங்கள்

என்று துரத்துவதில்லை.

சரி தானே!


ஆனால் பேருந்தில் மட்டும்

பெண்கள் சீட்டைத் தவிர மற்ற இருக்கைகளில்

பெண்கள் அமர்ந்தால்,

நெடுந்தொடர்களில் வரும் வில்லி ரேஞ்சுக்குப்
பார்க்கிறார்கள் இந்த ஆண்கள்.


அதென்ன ஸ்டேட்டுக்கு ஒரு நியாயம் சென்ட்ரலுக்கு ஒரு நியாயம்?

என் சந்தேகம் இது தான்:

பேருந்தில் பெண்கள் சீட் இருப்பது போல

ஆண்களுக்கென்று தனியாய் சீட் இருக்கிறதா?பெண்கள் என்று எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் ‘ஆண்களை’ப் பார்த்ததில்லை.

அப்போ மற்ற சீட்டுகளெல்லாம் இருபாலர்களுக்கும் பொது தானே?


சந்தேகம் நம்பர் 2:


காக்காய் குருவியெல்லாம் காற்றோட்டமாய்

மரத்தில் கூடு கட்டுகின்றன.


இரவில் மழை பெய்யும் போது

அவை நனைந்தபடியே உறங்குமா,

இல்லை குழந்தைக் குட்டிகளுடன்

வேறு இடம் செல்லுமா?


மழையை அவை எவ்வாறு சமாளிக்கின்றன?


சந்தேகம் நம்பர் 3:


ஆட்டு ரத்தம் சாப்பிட்டால் நான்-வெஜ்

ஆனால் மாட்டு ரத்தமான பால் மட்டும்

எப்படி வெஜ்ஜில் சேர்ந்தது?

விடைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன் . . .

3.7.11

கதை எழுதும் பிங்கு

பிங்கு இப்போது எழுத ஆரம்பித்திருக்கிறாள்.

பிங்குவின் எழுத்துகள் இங்கே


http://pingudarshini.blogspot.com/


கீ போர்டில் தட்ட கொஞ்சம் நேரம் பிடிக்கிறது. ஸ்பெல்லிங்கில் சந்தேகம் வருகிறது. மற்றபடி பரவாயில்லை.