16.7.11

ஆண்களுக்கென்று தனி சீட் . . .

ரொம்ப நாட்களாய் சில சந்தேகங்கள் என்னைக் குடைந்தபடியே இருக்கின்றன. அவற்றில் சில இங்கே . . .

சந்தேகம் நம்பர் 1:


ரயிலில் ஜெனரல் கம்பார்ட்மென்ட் உட்பட

அனைத்து பெட்டிகளிலும் பெண்கள் ஏறலாம்.

யாரும், லேடீஸ் பெட்டிக்குச் செல்லுங்கள்

என்று துரத்துவதில்லை.

சரி தானே!


ஆனால் பேருந்தில் மட்டும்

பெண்கள் சீட்டைத் தவிர மற்ற இருக்கைகளில்

பெண்கள் அமர்ந்தால்,

நெடுந்தொடர்களில் வரும் வில்லி ரேஞ்சுக்குப்
பார்க்கிறார்கள் இந்த ஆண்கள்.


அதென்ன ஸ்டேட்டுக்கு ஒரு நியாயம் சென்ட்ரலுக்கு ஒரு நியாயம்?

என் சந்தேகம் இது தான்:

பேருந்தில் பெண்கள் சீட் இருப்பது போல

ஆண்களுக்கென்று தனியாய் சீட் இருக்கிறதா?பெண்கள் என்று எழுதியிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் ‘ஆண்களை’ப் பார்த்ததில்லை.

அப்போ மற்ற சீட்டுகளெல்லாம் இருபாலர்களுக்கும் பொது தானே?


சந்தேகம் நம்பர் 2:


காக்காய் குருவியெல்லாம் காற்றோட்டமாய்

மரத்தில் கூடு கட்டுகின்றன.


இரவில் மழை பெய்யும் போது

அவை நனைந்தபடியே உறங்குமா,

இல்லை குழந்தைக் குட்டிகளுடன்

வேறு இடம் செல்லுமா?


மழையை அவை எவ்வாறு சமாளிக்கின்றன?


சந்தேகம் நம்பர் 3:


ஆட்டு ரத்தம் சாப்பிட்டால் நான்-வெஜ்

ஆனால் மாட்டு ரத்தமான பால் மட்டும்

எப்படி வெஜ்ஜில் சேர்ந்தது?

விடைகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன் . . .

11 comments:

ஸ்ரீராம். said...

பஸ்ஸில் ஆண்கள் என்று எழுதியிருப்பதைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. உடல் ஊனமுற்றவர் என்று கூட முதலில் ஒரு சீட் இருக்கும். பெரும்பாலும் அதில் மனம் ஊனமுற்றவர்கள்தான் உட்கார்ந்திருப்பார்கள்!
காக்கைக் குருவி பற்றி சொல்லும்போது இன்னும் ஒரு சந்தேகம். தூங்கும்போது அவை தூக்கத்தில் கீழே விழுந்து விடாதா?!

kggouthaman said...

// படித்துவிட்டு பிடித்தால் சொல்லுங்கள். //

பிடிச்சுடுச்சு ..... (!)

HVL said...

@ஸ்ரீராம்
//
பஸ்ஸில் ஆண்கள் என்று எழுதியிருப்பதைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது//
நான் தேடிப் பார்த்த வரை சென்னையில் இல்லை!

//தூங்கும்போது அவை தூக்கத்தில் கீழே விழுந்து விடாதா?!//

கூட்டிற்குள் பத்திரமாய் படுத்துக் கொள்ளும் என்று நினைக்கிறேன்!

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி!

HVL said...

@ kggouthaman
படித்துவிட்டு சொன்னதற்கு மிக்க நன்றி!

கணேஷ் said...

எப்படி வெஜ்ஜில் சேர்ந்தது?//

எல்லாம் நாம பிரிச்சிகிட்டதுதான்..
பார்க்கப்போன நாம் உண்பதில் எதுமே வெஜ் இல்ல )))

HVL said...

@ கணேஷ்
அப்படியா சொல்றீங்க!!!
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

simmakkal said...

Non-veganism shd involve killing. The animal s killed first; then, we eat its body parts from it. W/o killing, it s not possible to do so.

At the same time, if it s possible to do so w/o killing, then it s not non-veganism. It s vegnism only.

We drink the milk of the cattle - goat, cow, oxen, camel etc - w/o killing the animal. So, it s not non veganism.

Applying the same logic, eating human flesh s veganism if the human was already dead. In Central African Republic, the monarch used to eat human babies who died in infancy. He ate w/o killing. So it is veganism. Not everyday. but on special occasions, he celebrated the feast with cooking the flesh of human babies, as the flesh s tender. No killing. So veganism.

U can understand me better if u accept that the only purpose of veganism s to prevent killing. So, when there s no killing, its purpose s served. U r free of any guilt. U may take it as veganism.

At the same time, vegans point out that w/o killing, there is no possibility of flesh available for u to cook. U can argue back u havent killed the animal; only the butcher did. Even then remember it s for u he has killed, the vegans remind u.

U can shot back saying to them 'What if the death was natural, for e.g the cow has died of old age, y not eat its flesh? U have not provoked the killing, after all, havn't u?

U hav an interesting point. Y dont u ask u a fanatical vegan this qn?

On behalf of this blogger, I pose the same Qn.

கல்வெட்டு said...

சந்தேகம் நம்பர் 1:
//அப்போ மற்ற சீட்டுகளெல்லாம் இருபாலர்களுக்கும் பொது தானே?//

ஆம் பொதுதான்.
பொதுவான இருக்கையில் அமரும் பெண் அவளருகில் ஆண் உட்கார்ந்தால் அதை பொதுவாக எடுத்துக்கொள்ளாதவரை இப்படித்தான் இருக்கும்.
தமிழகம் மிகவும் ஹிப்போரொடிக்களால் ஆன சமுதாயம். :-(((

சந்தேகம் நம்பர் 2:
//மழையை அவை எவ்வாறு சமாளிக்கின்றன?

கூடுகள், கிளை, கோவுரங்கள்...போன்ற பாதுகாப்பான இடத்தில் தற்காலிக ஓய்வு என்று நினைக்கிறேன். அறிவியல் விளக்கம் தெரியவில்லை.

சந்தேகம் நம்பர் 3:
//ஆட்டு ரத்தம் சாப்பிட்டால் நான்-வெஜ்
ஆனால் மாட்டு ரத்தமான பால் மட்டும்
எப்படி வெஜ்ஜில் சேர்ந்தது?//

வெஜ் என்பது Vegetable என்பதன் சுருக்கம்...காய்கறிகள்.

பாலை வெஜ் என்று யார் சொன்னார்கள்?
அவை Dairy product category

HVL said...

@simmakkal
இப்படியும் விளக்கம் இருக்கிறதா? பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

HVL said...

//
பொதுவான இருக்கையில் அமரும் பெண் அவளருகில் ஆண் உட்கார்ந்தால் அதை பொதுவாக எடுத்துக்கொள்ளாதவரை இப்படித்தான் இருக்கும்.//

பெண்கள் இப்போது மாறிக் கொண்டு வருகிறார்கள் என்று நம்புகிறேன்!

//
கூடுகள், கிளை, கோவுரங்கள்...போன்ற பாதுகாப்பான இடத்தில் தற்காலிக ஓய்வு என்று நினைக்கிறேன். //
மழைப் பெய்யும் இரவில் நான் பறவைகள் பறந்து பார்த்ததில்லை. அது தான் சந்தேகம்!

'டைரி ப்ராடக்ட்' ம்ம்ம். . .

நெல்லைத் தமிழன் said...

சிம்மக்கல் விளக்கம் CONVINCINGஆக இல்லை.

சில பொருட்களுக்கு, அதன் மீது கொண்டிருந்த 'புனித பிம்பத்தின்' காரணமாக அவைகளை, VEGETARIAN என்று சொல்லப்படுபவர்கள் சாப்பிடலாம் என்று வைத்துள்ளது. பால், தயிர், நெய், வெண்ணெய், பட்டு, மான் தோல் (கடைசி இரண்டு சாப்பிட அல்ல. உபயோகிக்க. ஆனால் உயிர்கள் இறந்து அதிலிருந்து கிடைப்பது) இவைகள் அதில் சேரும். ரொம்ப யோசித்தால், இட்லி மாவு புளிக்கும்போது (FERMENT ஆகும்போது) நிறைய புழுக்களை அதில் பார்க்கலாம் (பூதக்கண்ணாடி). அதைத்தான் FERMENT ஆவது என்று சொல்கிறோம். இதிலெல்லாம் ரொம்பவும் யோசனை செய்யக்கூடாது.

பஸ்ஸில், பெண்கள் தனி, மற்ற இடங்கள் இரு பாலாருக்கும் பொது. ஆனால் பெண்கள் இருக்கைகள் காலியா இருக்கும்போது மற்ற இருக்கைகளை ஆக்கிரமித்தால் (சட்டப்படி தவறில்லையென்றாலும்) ஆண்களின் 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்'ஐ FACE பண்ணவேண்டிவரும்.

பறவைகள், விலங்குகள் நனைந்தபடிதான் உறங்கும். தடுப்பு தேடிச் செல்லாது. பறவைகள், விலங்குகளிடம் உள்ள உள் MECHANISM காரணமாக அவைகள் விழுவதில்லை. நமக்குத் தூக்கம் வந்தால், கையிலுள்ள GRIP போய்விடுவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். அந்தக் குறைபாடு பறவைகளுக்குக் கிடையாது.