31.7.11

நாங்க எப்பவும் இப்படி தான்!

எல்லோர் வீட்டிலும் இருப்பது போல

என் பிள்ளைகளுக்குள்ளும் சண்டை வருவது சகஜம்.


எல்லாம் நன்றாய் தான் ஆரம்பமாகும்!

அக்கா- தங்கையாய், நண்பர்களாய், கடைக்கார- வாடிக்கையாள ராய், ஆசிரிய-மாணாவ ராய், மாறி விளையாடிக் கொண்டிருப்பார்கள்.


திடீரென்று தாங்கள் ஏற்றுக் கொண்ட

கதாபாத்திரத்தின் தன்மையினாலோ,

அல்லது தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினாலோ

சூழ்நிலையில் கணம் ஏறும்.


மெதுவாய் பேசிக் கொண்டே இருப்பவர்களின் தொனி

மெல்ல மெல்ல உயரும்.

கொஞ்ச கொஞ்சமாய் சிதற ஆரம்பிக்கும்

விளையாட்டு சாமான்கள், பின்

மூலைக்கொன்றாய் பறக்கும்.


சமாதானம் செய்யலாம் என்று

உள்ளே நுழைந்தால்

குந்தவையும் நந்தினியுமாய் இருந்தவர்கள், சட்டென்று

குந்தவையும் வானதியுமாய் மாறிவிடுவார்கள்.

ஆபத்து நம் மூக்கிற்கு தான்!

சண்டை கூட விளையாட்டின் ஒரு பகுதி போல!

அதெல்லாம் நமக்கெங்கே தெரிகிறது?இன்று பார்த்தால் அதிசயமாய்

ஒருவரை ஒருவர்

கன்னத்தை
பிடித்தபடி

கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.


‘என் செல்லோஓஓம்! என் தங்கோஓஓம்!’ என்று ராகத்தோடு

சொல்லிக் கொண்டிருந்தாள் பிங்கு.


“என்னது அதிசயமா இருக்கு!

சண்டை போடாம கொஞ்சிகிட்டு இருக்கீங்க?”

என்று நான் கேட்டதற்கு,


“நீங்க வேற பிங்கு என் கன்னத்தை

கிள்ளறதால நான் திருப்பி கிள்ளறேன்.

அவள முதல்ல விடச் சொல்லுங்க நான் விடறேன்!” என்கிறாள் பெரியவள்.


இந்த காலத்து பிள்ளைங்க

எப்படியெல்லாம் சண்டைப் போடறாங்க!


__________________________________________________


பிங்குவிற்கு ஐந்து வயதிருக்கும் போது அவளை

"என்ன வேலைக்கு போக பிடிக்கும்?" என்று கேட்டால்,

"காலைல போலீஸ்,

மதியம் டீச்சர்,

நைட் அஸ்ட்ரா னட்" என்பாள்.


காலை மற்றும் மதிய வேலைகள்

அவ்வப்போது மூடிற்கேற்றவாறு மாறும்.


ஆனால் நைட் மட்டும் கண்டிப்பாய்

அஸ்ட்ரானட் தான்.

ஏன் அப்படி என்று கேட்டால்,

நைட்ல தான் நிலா வருமாம்!

அப்போ தான் நிலாவுக்கு போக முடியுமாம்!

சரி தான்!!!!!!!!!!!

9 comments:

கணேஷ் said...

ஆன முதல்தான் சூப்பர்..சந்தேகமும் வராது..சண்டையும் போட்ட மாதிரி ஆச்சு..

கிள்ளி ரத்தம் வரதுக்குள்ளே பார்த்தாதான் உண்டு ))

HVL said...

இப்பல்லாம் அவங்க சும்மா உட்கார்ந்திருந்தா கூட சந்தேகம் வருது!

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கணேஷ்!

ஸ்ரீராம். said...

குந்தவை நந்தினி, குந்தவை வானதி உதாரணம் அழகு! நாம் எல்லோருமே அந்தப் பருவத்தைத் தாண்டி வந்திருந்தாலும் இது எப்போதுமே அதிசய ஆச்சர்யம்தான். இரவில் அஸ்ட்ரானட்...ஹா...ஹா...

குழந்தைகள்...!

kggouthaman said...

தினமும் அடிப்பதற்கு - இந்தக் குழந்தைகளுக்கு மட்டும் எங்கிருந்துதான் இவ்வளவு Bad boys கிடைப்பார்களோ - தலையணைகளும், போர்வைகளும் அடி வாங்க வேண்டாம் என்று நாம் குறுக்கே புகுந்து பார்த்தால், இரண்டு பேரில் ஒருவன் நம்மையும் bad boy என்று அறிவிப்பான் - உடனே நமக்கு மண்டகப்படி ஆரம்பிக்கும்!

HVL said...

@ஸ்ரீராம்
//
நாம் எல்லோருமே அந்தப் பருவத்தைத் தாண்டி வந்திருந்தாலும் இது எப்போதுமே அதிசய ஆச்சர்யம்தான்.//

அந்த பருவத்தை தாண்டி விட்டோமே என்பது தான் என் வருத்தம். உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

HVL said...

@ kggouthaman
//
நாம் குறுக்கே புகுந்து பார்த்தால், இரண்டு பேரில் ஒருவன் நம்மையும் bad boy என்று அறிவிப்பான் //

இது கூட எல்லார் வீட்டிலும் நடக்கிறதோ! உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

Chitra said...

cute!!!

HVL said...

மிக்க நன்றி சித்ரா!

குடந்தை அன்புமணி said...

பதிவர்களுக்காக- பதிவரால்- பதிவர் தென்றல் மாத இதழ். மேலும் விவரங்களுக்கு என் வலைத்தளம் வருக...