15.8.11

என் தோழியே!

எனக்கென்று சில கொள்கைகள் உண்டு
அவற்றை பற்றி கவலைப் படாதே,
உன்னை பாதிக்காத வரை!

என்னால் முடிந்ததை செய்கிறேன்,
முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்!
முடியாததை, ‘முடியாது’ என்று
தானே சொல்ல முடியும்!

இதை உன்னால் புரிந்துக்கொள்ள முடிந்தால்
‘You are Great!’
திமிரென்று எண்ணினால்
‘I am Sorry’,
உன்னுடைய கருத்துகளையும்
நான் மதிக்கிறேன்!

_________________________________________________

முடிந்தால் உதவுங்கள்!

நான் e-kalappaiயில் உள்ள யூனிக்கோடு என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து தட்டச்சுகிறேன்!
ஆனால் சில கணினிகளில் என் எழுத்துகள் வட்டமும் சதுரமுமாய் தெரிகின்றன!

என்னுடைய எழுத்துகள் யூனிக்கோடில் இருக்கின்றனவா என்று தெரியவில்லை!
இதை எப்படி கண்டுபிடிப்பது?

யூனிக் கோடில் எப்படி தட்டச்சுவது?

தயவு செய்து விபரம் தெரிந்தவர்கள் உதவுங்கள்
!

7 comments:

ஸ்ரீராம். said...

தோழைமைக்குச் சொல்லும் தகவல் நீட்! நன்றாக உள்ளது. ஏதும் சமீபத்திய அனுபவத்தின் விளைவாய் இருக்காது என்று நம்புகிறேன்!

நான் கூகிள் டிரான்ஸ்லிட்டேரேஷன்தான் உபயோகிக்கறேன். இதுவரைப் பிரச்னையில்லை!

HVL said...

@ஸ்ரீராம்

பொதுவாய் என் அனுபவங்கள் எல்லாம் இப்படி தான். எதிர்பார்ப்பு தோழமைக்குள் வரும் போது பிரச்சனையும் கூடவே வந்து விடுகிறது. என்ன செய்வது!

கூகிள் டிரான்ஸ்லிட்டேரேஷன் யூனி கோடா? எனக்கு அதைப் பற்றி தெரியவில்லை.
நான் யூனிக்கோடில் எழுதுவது எப்படி என்று தெரிந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

Lakshmi said...

என்னால் முடிந்ததை செய்கிறேன்,
முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்!
முடியாததை, ‘முடியாது’ என்று
தானே சொல்ல முடியும்!


உண்மைதானே. எ-கலப்பையில் இப்படி ப்ராப்லம் வரத்தான்செய்யுது. நான்
N.H.M.WRITER யூஸ் பண்ணித்தான் எழுதரேன். எந்த பிரச்சினையும் இல்லே.

கணேஷ் said...

http://thamizhthottam.blogspot.com/2009/12/blog-post.html

இதை கொஞ்சம் பாருங்க.. இதைத்தான் தொடக்கத்தில் இருந்து பயன்படுத்துறேன்.

HVL said...

@ Lakshmi
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!
N.H.Mஐ முயற்சி செய்து பார்க்கிறேன்!

HVL said...

@ கணேஷ்
படித்துப் பார்த்தேன், முயற்சி செய்து பார்க்கிறேன். மிக்க நன்றி!

Anonymous said...

It's amazing in favor of me to have a website, which is helpful in favor
of my experience. thanks admin

my site: success keys (en.wikipedia.org)