23.8.11

ஃபேஸ் புக்கும் சில சந்தேக பிராணிகளும் . . .

ஃபேஸ் புக்கில் ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன்.

அவர் ரொம்ப நெருக்கமில்லாதவராக இருந்தாலும்,

தெரிந்தவராக இருப்பார்.

சரி இவரை நண்பராக்கிக் கொள்வோம் என்று முயன்றால்

அவரது பக்கத்தில் 'add friend' பட்டன் மட்டுமே ஆக்டிவ்வாக இருக்கும்!

தன்னிலை விளக்கம் கொடுக்க,

அதாவது எங்கே பார்த்தோம், எங்கே பேசினோம்

போன்ற மேலதிக தகவல்களைக் கொடுக்க

வழியே இருக்காது!

பொதுவாய் முன்பின் தெரியாதவர்களை

நானே கூட தோழராய் ஏற்றுக் கொள்ளமாட்டேன்!

அவரது ஈமெயிலோ, தொலைபேசி எண்ணோ நமக்கு தெரிந்திருக்காது!

அவரோ ஒரு தகவல் கூட அனுப்ப முடியாத அளவிற்கு

தன் பக்கத்தை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருப்பார்.

(மனித குலத்தின் மீது அவ்வளவு
நம்பிக்கை!? )

சரி அவருடைய நண்பராக இருக்க விருப்பம் தெரிவித்தால்,

நான் யாரென்றாவது விசாரிக்க முன்வருவார்

என்று நினைத்தால், நம்முடைய வேண்டுகோள்

கிணற்றில் போட்ட கல் போல அப்படியே இருக்கும்.

ஒரு சில பிரபலங்களின் பக்கங்களை பார்த்திருக்கிறேன்.

அதில் கூட இப்பேர்பட்ட தடைகள் இல்லை! நிறைகுடம்!?

இவ்வளவு பாதுகாப்பை விரும்புபவர்கள்

ஏன் ஃபேஸ் புக்கில் அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சும்மா கிடைக்கிறது என்று துண்டு போட்டு பிடித்திருப்பார்களோ!

இப்பேர்பட்ட சந்தேகப் பிராணிகளின் நட்பே தேவையில்லை என்று

இப்போதெல்லாம் அதைப் போன்றவைகளுக்கு

ப்ரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்புவதே இல்லை.


8 comments:

kggouthaman said...

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், பிரபலங்கள் சிலர் பெயரில், அவரின் அனுமதியோடு வேறு ஆர்வலர்கள் ஃபேஸ் புக்கில் கணக்குத் துவங்கி - அந்தப் பிரபலங்களிடம் ஒப்புவித்து விடுகின்றார்கள். அந்தப் பிரபலங்கள் பிறகு அதை மறந்துவிடுகிறார்கள். என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் பல சமூகத் தளங்களில் - பல நுழைவுச் சொற்கள் ஆரம்பத்தில் கொடுத்து, பிறகு, அந்த நுழைவுச் சொற்களை மறந்து - திரும்பக் கணக்கில் நுழைய மிகவும் கஷ்டப் படுவார். எனவே, ஃபேஸ் புக்கில் பிரபலங்கள் அதிகம் புழங்காததற்கு, பாதுகாப்பு உணர்வு மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாது.

கணேஷ் said...

அதுக்கு காரணம் அவங்க தன் கெத்தை(மரியாதையை/ புகழ்) maintain பண்றாங்களாம்)))

என்ன செய்ய?/ உங்கள் முடிவுதான் சரி

Lakshmi said...

ஆமா ஃபேஸ்புக்கில் இந்த
சந்தேகம் எல்லாருக்குமே
இருக்கும்னு நினைக்கிரேன்.

ஸ்ரீராம். said...

உண்மைதான். இதில் இன்னொரு கூத்து. நண்பரொருவர் அவர் பெயரில் வந்திருந்த ஸ்டேட்டஸ் குறிப்பை அவரே முதல் முறையாகப் படித்து ஆச்சர்யப்பட்டுப் போனார். அவர் கணக்கிலிருந்து யார் எப்படி வெளியிட்டார்கள் என்று ஆராய்ந்து வருகிறார். வருடத்துக்கு மூன்று முறை மட்டுமே மெயிலையும் முகப் புத்தகத்தையும் திறக்கும் நண்பர்கள் நிறைய உண்டு!

HVL said...

@ kggouthaman
ஃபேஸ் புக்கை பொறுத்தவரை எது உண்மை எது பொய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை தான்!
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

HVL said...

@ கணேஷ்
பரவாயில்லை என்னை மாதிரியே யோசிக்கறீங்க! உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

HVL said...

@ Lakshmi
ஆமாங்க! உங்க கருத்துக்கு மிக்க நன்றி.

HVL said...

@ஸ்ரீராம்
எனக்கும் இந்த சந்தேகம் உண்டு! நான் ரெக்வஸ்ட் அனுப்பிய பிறகு அவர்கள் ஸ்டேடஸ்சை அப்டேட் செய்திருக்கிறார்கள்! என்ன செய்வது?
மிக்க நன்றி!