19.9.11

வீட்டுக்கு வீடு-1

Busyன்னா என்ன என்பதை இப்போது தான் பார்க்கிறேன்!
தலையை பிய்த்துக் கொள்ளலாம் போல இருக்கிறது! 

இப்படியெல்லாம் பதிவு எழுதுகிறேன் என்றால் பிள்ளைகளுக்கு exam நெருங்குகிறது என்று அர்த்தம். இதற்கு நடுவே போட்டிகள் வேறு.

குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பதைப் போல நான் செய்யாததையெல்லம் பிள்ளைகளிடம் முயற்சித்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நேற்று பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது வந்த ஒரு கேள்வி

‘ஏன் knowவை ‘க்நோ’ ன்னு படிக்காம் ‘நோ’ன்னு படிக்கிறோம்?’
‘ஏன்னா, இதில k சைலெண்ட்’
‘மத்த எழுத்துகளும் இது போல சைலெண்ட்டா வருமா?’
‘ஓ வருமே!’
‘அப்ப ABCD சொல்றதுக்கு பதில் சைலெண்ட்டாவே இருக்கலாமே!’
இதுக்கு என்ன பதிலைச் சொல்லுவது?

4 comments:

ஸ்ரீராம். said...

ஹா...ஹா....நல்ல கேள்விதான். பிரமாதம். சிரித்து விட்டேன்.

கணேஷ் said...

அறிவாளிங்க..))

Charu said...

Kozhuppu!! vera enna :-) ROFL!

கபிலன் said...

பிள்ளை டாப்பா வருவா பாருங்க.
என்ன ஒரு திங்கிங்!!!