6.9.11

பழசு. . .!


கணினியில் ஸ்க்ரோல் செய்து

பிறந்த வருடத்தைத்

தேடும் போதும்,


கனகாவின் அம்மாவை

அப்பா காட்டியது போல்

சூர்யாவின் அப்பாவை

மகளுக்கு காட்டும் போதும்,


கருப்பு வெள்ளை,

ஈஸ்ட்மென் கலர் படங்களை

ரசித்துப் பார்க்கும் என்னை

மகள் முறைக்கும் போதும்

வயது ஏறுவதை உணர்கிறேன்!

4 comments:

ஸ்ரீராம். said...

அருமை. அருமை.

இப்படி இதில் இன்னும் சில விஷயங்களைக் கூடச் சேர்க்கலாம். பாடல் தெரிவிலிருந்து, உடை, சிகை அலங்காரம் வரை...!

HVL said...

வாங்க ஸ்ரீராம்!
ஆமாம் இது போல இன்னும் நிறைய இருக்கின்றன.
வருகைக்கு மிக்க நன்றி!

மோகன்ஜி said...

நல்ல கவிதைங்க.. ரசித்தேன்

HVL said...

மிக்க நன்றி மோகன்ஜி!