8.9.11

சோகம் கடத்தி
பிள்ளைகளையும் அவர்தம்

பிள்ளைகளையும் 

பார்க்க முடியாத வேதனையை

நெடுந்தொடர்களைக் கொண்டு

சில மணித்துளிகள்

மறக்கிறாள் அம்மா . . .


பல்லியைப் போல

வீட்டின் சுவர்களில் 

நாடகப் பாத்திரங்களின்

பேச்சும் அழுகையும் 

ஊர்ந்தபடியே 

இருக்கின்றன எந்நேரமும் 


தொலைக் காட்சி

பெரிய கோட்டைக் கிழித்து

அவள் பிரச்சனைகளை 

சிறியதாக்கி

சோகம் கடத்துகிறது 

தற்காலிகமாய்!


3 comments:

எஸ்.ஆர்.சேகர் said...

சோகம் கடத்தி ஜோர்..ஆனால் தொலைக்காட்சிகள் உண்மையில் “சோகம் பெருக்கிகள் “ தானே

ஸ்ரீராம். said...

உண்மைதான். பார்க்கும் காட்சிகளைக் கவிதை ஆக்கி விட்டீர்கள். நெடுந்தொடர்களைப் பார்த்து சோகம் மறப்பது என்பது பாம்புக்கு பயந்து முதலையிடம் மாட்டுவது போல என்று எனக்குத் தோன்றும்! ஆயினும் கவிதையாக்கம் நன்றாக இருக்கிறது.

HVL said...

@எஸ் ஆர் சேகர், ஸ்ரீ ராம்

தொலைக்காட்சி நாடகங்கள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன என்பது உண்மை. ஆனாலும் அதற்கு கட்டுப்படும் மக்களைப் பார்க்கும் போது ஆச்சரியமாய் இருக்கிறது!


உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி!