15.10.11

பள்ளியில். . .கொண்டு விடும்
அம்மாவின் நினைவில்
கண்ணீர் விட்டு
தன் பொழுதின்
முதல் பகுதியையும்

ஆசிரியர் மற்றும்
நண்பர்களின் விளையாட்டில்
மனம் பதித்து 
அதன்
இடைப்பகுதியையும்

வீட்டின் நினைவு
கிளப்பிய ஏக்கத்தில்
பிற்பகுதியையும்
கழிக்கிறது
பாலர் பள்ளியில்
புதிதாய் சேர்ந்த
குழந்தை

1 comment:

ஸ்ரீராம். said...

அருமை. நம் குழந்தைக்கு நாம் கவலைப் படும்போதுதான் நமக்காக நம் பெற்றோர் பட்ட கவலை கூட நினைவுக்கு வரும்!