3.12.11

ப்ளீஸ் . . . இவர்களுக்கெல்லாம் யாராவது சொல்லிக் கொடுங்களேன்!



நேற்று இரவு வசந்தத்தில் பொம்மை 2 போட்டார்கள்.
பொதுவாய் நான் இரவில் கண்விழித்து படம் பார்ப்பதில்லை, ரொம்ப நல்ல படமாய் இருந்தாலே தவிர!
என் பிள்ளைகளின் தொல்லை தாங்க முடியாமல் இரவு விழித்திருந்தேன். பயமாம்!
படம் ஆரம்பிக்கவே பதினோரு மணி ஆனது. கொடுமை!


என்ன நினைத்து படத்தை எடுத்தார்கள் என்று புரியவில்லை!
பேய் கத்தியை எடுத்துக் கொண்டு துரத்துகிறது!
குழந்தையால் கூட ஒளிந்துக் கொண்டு பேய்க்கு போக்கு காட்ட முடிகிறது!


ஹீரோ இரண்டு முறை ஆழமான கத்திக் குத்துகளைப் பெற்றுக் கொண்டு (பேயிடமிருந்து தான்) ரத்த சேதாரமின்றி, வயிற்றை கையால் பிடித்துக் கொண்டே கடைசி வரை ஓடுகிறார்!


பேய் சில நேரங்களில் fancy dress competitionக்கு செல்வது போல உடுத்தியிருக்கிறது!


படம் எடுத்தவருக்கு சில அடிப்படை விஷயங்கள் தெரியவில்லையோ என்று தோன்றுகிறது


1.     பேய், சண்டைக் காட்சியிலெல்லாம் துரத்தியபடி ஓடிவர தேவையில்லை. ஆட்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடவும் தேவையில்லை.


அவற்றிற்கு நாம் செய்வது அனைத்தும் தெரிந்திருக்கும்.


அவ்வப்போது முகத்திற்கு நேரே வந்து பயமுறுத்தி B.Pயை எகிற வைத்தோ, ஓடும் மின்விசிறியை தரை வர இறக்கியோ அல்லது மனிதர்களை காற்றில் பறக்கவிட்டு, சுவற்றில் மோதியோ கொன்றால் போதும்!




2.     பேய்க்கு மனிதரைக் கொல்ல கத்தியும் துப்பாக்கியும் தேவையில்லை! கடைக்கண்பார்வையே போதும். வேண்டுமானால் சிரிப்பையும் சேர்த்துக் கொள்ளலாம்.


கொல்வதற்கு முதல் பாயிண்ட்டில் சொல்லியிருக்கும் வழிகளைப் பயன்படுத்தலாம் அல்லது ரசிகர்களையாவது கேட்கலாம்.


3.பேயை மாடியிலிருந்து கீழே தள்ளியெல்லாம் சாகடிக்க முடியாது. ஆனானப்பட்ட ரஜினியே அப்படியெல்லாம் செய்ததில்லை!


விழும் போது உடலிலிருந்து ஆவி பிரிந்து தனியே செல்வதையாவது காட்ட வேண்டும். ஆவி மன்னிப்புக் கேட்டபடியோ அல்லது தோல்வியை ஒப்புக் கொண்டோ செல்வதாக காட்டுவது கூடுதல் அழகு.


என் சந்தேகம் ஒன்றே ஒன்று தான். படம் எடுத்தவர்கள், எடுக்கும் போது பார்த்தவர்கள், நடித்தவர்கள் இவர்களில் யாருக்குமேவா இதெல்லாம் தோன்றியிருக்காது!


மொத்ததில் நேரம் சரியில்லை! தூக்கத்தை கெடுத்துக் கொண்டு பார்த்த எனக்கு தான்!

5 comments:

ஸ்ரீராம். said...

அட என்னங்க நீங்களே பேய்க்கு எப்படிக் கொல்லலாம்னு ஐடியா எல்லாம் சொல்லிக் கொடுப்பீங்க போலேருக்கு.... பேய்ப் படம் மட்டும் இல்லை, பக்திப் படத்துலயும் ரொம்பவே லாஜிக் இடிக்கும்.

வே.சுப்ரமணியன். said...

நகைச்சுவையுடன் எதார்த்தமான கருத்துக்கள். நன்றி!

HVL said...

@ஸ்ரீராம்
//
பேய்ப் படம் மட்டும் இல்லை, பக்திப் படத்துலயும் ரொம்பவே லாஜிக் இடிக்கும்.//

பேய் படம் பேய் படத்திற்கான லாஜிக்கையும் பக்தி படம் பக்தி படத்திற்கான லாஜிக்கையுமாவது கடைபிடிக்கவேண்டுமே!

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

HVL said...

மிக்க நன்றி சுப்ரமணியன்

Charu said...

நிஜம்! நன்றாக எழுதப்பட்டுள்ளது! வளர்க!