24.12.11

அஷ்டமத்தில் நான்!

எனக்கு அவ்வப்போது ராசி பலன்களில் நம்பிக்கை வந்து போகும்.

அநேகமாய் அடுத்த இரண்டு வருடங்களுக்கு நம்பிக்கை இருக்காது.

காரணம் அஷ்டமத்து சனி!

‘நரி இடம் போனால் என்ன!
வலம் போனால் என்ன!
மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி!’
என்று நான் பாட்டுக்கு சென்று கொண்டிருக்க,
சனிபகவான் குறுக்கே வந்தால் என்ன செய்வது?
கீழ்கண்ட வழிகளைப் பின்பற்ற முடிவு செய்திருக்கிறேன்


1) இந்த இரண்டு வருடங்களுக்கு
மேலோட்டமாய் படித்துப் பார்த்து
பலன் நன்றாயிருந்தால் தொடர்ந்து படிப்பது,
இல்லாவிட்டால் எஸ் ரா பக்கம் சென்று விடுவது.

2) ஆங்கில சீன மொழிபெயர்ப்பு ராசிபலன்களை,

எந்த மொழியானாலும் சனிபகவான் இல்லாத மொழியாக பார்த்து,

படித்துக் கொள்வது.

3)நாட்காட்டியில் போட்டிருக்கும் பலன்களைப்

 படித்து திருப்தி கொள்வது!

பெரிய பெரிய வாக்கியங்களில் உன் நேரம் சரியில்லை

என்று படிப்பதை விட ,

 'நோய்' 'நஷ்டம்' போன்ற  ஒற்றை வார்த்தை பலன்களை

எளிதாய் கடந்துவிட முடிகிறது!4 comments:

கணேஷ் said...

ஹ ஹ ..நீங்களுமா நம்புரிங்க அதை எல்லாம் )))

HVL said...

எனக்கு சாதகமா இருந்தா மட்டும் நம்புவேங்க. படித்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி!

ஸ்ரீராம். said...

அப்படியாவது ராசிபலன் படிச்சுதான் ஆகணுமா என்ன?!!

Charu said...

நல்ல ஐடியா :-)