27.12.11

வெளியேற்றம்இந்த வழி வெளியேறுதல்

சற்று சிரமம்!
ஆயினும் பயமில்லை!


உங்களை சற்றே
குறுக்கிக் கொள்ளுங்கள்!


மூச்சு முட்டுகிறதா?
பிராணவாயு போதவில்லை!


மேலே பாருங்கள்
தெரிகிறேனா?


இல்லையா!
அப்படியென்றால் நீங்கள்

இன்னும் சற்று முன்னேற வேண்டும்!

உடலை மெல்ல உலுக்குங்கள்!

மெதுவாக . . .

இதோ என் கை

தெரிகிறதா?
அதைப் பிடித்துக் கொள்ளுங்கள்!


அப்படித்தான்!
அவசரமில்லை!
மெல்ல. . . மெல்ல!


இப்போது சுலபமாய் இருக்கிறதா?

அப்படியே உடலை உதறிவிடுங்கள்!
இனி ரசிக்கலாம்
இவ்வுலகை ஆவி ரூபத்தில்!

5 comments:

கணேஷ் said...

அப்படியே உடலை உதறிவிடுங்கள்!
இனி ரசிக்கலாம்
இவ்வுலகை ஆவி ரூபத்தில்!//

இதுக்குனா நான் வரலப்பா ))

அப்படியே பூமியை விட்டுவிடுங்கள்
இனி ரசிக்கலாம்
வேற்று உலகத்தை...

ஏலியன்

இதுக்கு நான் சம்மதம் ))

ஸ்ரீராம். said...

என்னங்க...பயமுறுத்தறீங்க...!

HVL said...

@கணேஷ்
இது கூட நல்லா தான் இருக்கு! மிக்க நன்றி.

HVL said...

@ ஸ்ரீராம்
உண்மையாகவா? மிக்க நன்றி!

Charu said...

nallaa irukku