29.1.12

ஏக்கம்கடந்த கால நிகழ்வு,

பல் பிடுங்கப்பட்ட பாம்புபோல

கடுஞ்சொற்களைத் தொலைத்து

எரிச்சலைக் கழித்து

வலியை இழந்து

பின் தன்னை

இதமாய் ஒளியேற்றிக் கொண்டு

மிருதுவாய் மனக்கண்ணில் தோன்றி

மறுபடியும்

அந்த நிகழ்விற்குள் சென்று

வாழ்ந்து பார்க்கும்

நிறைவேறா ஆசையை ஏற்படுத்துகிறது  

5 comments:

ஸ்ரீராம். said...

நல்ல ஆசை.

டைம் மெஷின் ஒண்ணு ஆர்டர் பண்ணிடுவோம்.

கணேஷ் said...

ஆனா என்ன செஞ்சாலும் முடியாதே..)))

அதான் சொல்றது வாழ்கிற நிமிசத்தை நல்லா வழ்ந்துக்கனும்னு..))

HVL said...

மிக்க நன்றி கணேஷ், ஸ்ரீராம்

கீதமஞ்சரி said...

மனதைச் சுண்டும் வரிகள். ஒருவேளை காலம் தன்னை மாற்றிக்கொள்ளாமலேயே நம்மை வரவேற்றுக்கொண்டுவிட்டால் மீண்டும் அந்த வதையிலிருந்து மீள்வது சாத்தியமா? தெரியவில்லை. ஆனாலும் கவிதை ரசிக்கவைக்கிறது.பாராட்டுகள்.

HVL said...

நன்றி கீதமஞ்சரி!