6.5.12

இடைவெளிகள்
உயிரைக் கொடுக்கும் நட்பென்றாலும்


உயர் அமரக் காதலென் றாலும்


இடைவெளி யில்லா உறவென்றா லது


இறுக்கிப் பிடிக்கும் கயிறே யாகும்!அன்பின் பெயரைச் சொல்லியே அது


ஆமையின் ஓடாய் முதுகில் அமரும்,


மனதின் ஆசையை பிறர்மேல் சுமத்தும்,


 மானிடர் இயல்பை மாற்ற முனைந்திடும்.நாங்கள் இருவரும் ஒன்றே யென்று


தண்ட வாளங்கள்  பின்னி பிணைந்தால்


ரயிலும் ஓட வழிதான் ஏது?நட்பிற் கிடையே இருக்கும் இடைவெளி


நண்பனை உயர்வாய் நினைக்கச் செய்திடும்!


கணவன் மனைவிக் குள்ள இடைவெளி


புரிதலைக்  கொடுத்து குடும்பத்தை உயர்த்தும்!முதியவர் இளையவர்க் கிருக்கும் இடைவெளி


அனுபவ கருத்தைக் கேட்கச் செய்திடும்!


பெற்றோர் குழந்தைக் குள்ள இடைவெளி


பிள்ளைக் குள்ளே பெருமையாய் மலரும்!உறவுகள் நெடுநாள் நிலைத்தே நிற்க


இடைவெளிகள் தேவை மனிதருக் குள்ளே!

2 comments:

ஸ்ரீராம். said...

அருமை. அடுத்தவர் சுதந்திரத்தில் மூக்கை நீட்டாத நட்பும் உறவுமே சிறந்தது. போதிய இடைவெளி அவசியம் என்று படித்த போது 'சம்சாரம் அது மின்சாரம்' லக்ஷ்மியின் 'க்ளைமேக்ஸ்' வசனங்கள் நினைவுக்கு வந்தன!

HVL said...

வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.