11.5.12

பொம்மலாட்டம்


தொப்புள் கொடி யறுந்து

பூமிதனில் வீழ்ந்த போதே
கட்டிவைத்தேன் பொம்மையை

பாசமென்னும் கயிற்றினால் . . .

துவங்கியது பொம்மலாட்டம்

தத்தித் தாவும் வயதிலே

கயிறு இழுத்த இழுப்பிற்கு

பாடென்றால் ஆடென்றால்
பிசகின்றி செய்தது

மழலை பேசும் அப்பொம்மை !


வருடம் மேலும் செல்லவே
மென் பாசக் கயிறுடன்

மெல்ல வந்து சேர்ந்தது

கண்டிப்பான வன்கயிறு

கயிறிழுத்த திக்கெல்லாம்

பொம்மை வாகாய் சென்றது
ஓடிவிளை யாடும் நேரம்

புத்தகத்தைப் படித்தது
பாட்டு நடனம் கற்றது

போட்டிகளில் வென்றது

குருவி பார்த்து வியக்கும் வயதில்
கணினி கற்றுக் கொண்டது

தன்னைப் பார்க்க குழந்தையின்றி
குருவி அருகிப் போனது!


கயிற்றைப் பிடித்த கையின் ஆசை
பொம்மை மீது படிந்தது

தனது விருப்பம் என்னவென்று
பொம்மை அறிய மறந்தது

கயிறு போன திசையிலெல்லாம்

பொம்மலாட்டம் தொடர்ந்தது . . .


(கவிச்சோலையில் பரிசு பெற்ற கவிதை) 


6 comments:

ஸ்ரீராம். said...

மிக அருமையாய் இருக்கிறது. ஓடி விளையாடும் நேரம் புத்தகம் படித்ததும், குருவி பார்த்து வியக்கும் நேரம் கணினி கற்றுக் கொல்லும் வரிகளும் மிக அருமை.

HVL said...

வாங்க ஸ்ரீராம்! மிக்க நன்றி!

T.N.MURALIDHARAN said...

உங்கள் பதிவைப் பற்றி இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.நேரமிருப்பின் பார்க்கவும்
http://blogintamil.blogspot.in/

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான கவிதை சார் ! நன்றி !

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் படைப்புக்கள் சென்றடையும் ! நன்றி !

HVL said...

@ திண்டுக்கல் தனபாலன்
Thankyou very much for the comment

கோமதி அரசு said...

கயிறு போன திசையிலெல்லாம்

பொம்மலாட்டம் தொடர்ந்தது . . .//

ஆட்டி வைத்தால் ஆடுகிறோம்.