14.8.12

கல்கி சிறுகதைப் போட்டியும் என் கதையும்

கல்கி சிறுகதைப் போட்டி 2012 க்கு 'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே' என்பதை மனதில் கொண்டு சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பினேன்.

அது பிரசுரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
'சிநேகிதியே . . .' என்ற என் கதை பிரசுரமாகும் இதழுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

இது புத்தகத்தில் பிரசுரமாகும் எனது இரண்டாவது கதை. இதற்கு முன் வம்சி சிறுகதைப் போட்டியில், பிரசுரத்திற்காக எனது 'வார்த்தைகள்' தேர்ந்தெடுக்கப்பட்டது.
அது கீழே குறிப்பிடப்பட்டுள்ள எனது மற்றொரு பக்கத்தில் இருக்கிறது.

என் கதையைப் படித்து பிரசுரத்திற்கு தேர்ந்தெடுத்த ஒரு நடுவராகிய வெ. இறையன்புவின் கதைகளை நான் படித்ததில்லை.
இது என் மனசாட்சியை உறுத்தியதால் அவருடைய சிறுகதைத் தொகுப்பை நூலகத்தில் இரவல் பெற்று படித்துக் கொண்டிருக்கிறேன்.

(  பொதுவாக இந்த பக்கத்தில் மனதில் என்ன தோன்றியதோ அதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
சரி எதையாவது உருப்படியாய் செய்ய முயற்சிப்போமே என்று தொடங்கியது தான் இப்பக்கம்
http://riviyah.blogspot.sg/

இரண்டிலும் எழுதுகிறேன்.)


12 comments:

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள். கல்கியில் பார்க்கிறேன்.

T.N.Elangovan said...

வாழ்த்துக்கள், உங்கள் கதை கல்கியில் பிரசுரிக்கப்பட தேர்ந்தெடுக்கப் பட்டமைக்கு!

HVL said...

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, T.N.Elangovan, ஸ்ரீராம்.

திண்டுக்கல் தனபாலன் said...

மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்... நன்றி...

ஸ்ரீராம். said...

வம்சி பதிப்பகப் புத்தகத்தில் உங்கள் 'வார்த்தைகள்' கதை படித்தேன். மனவியல் கதை. நன்றாக இருந்தது. கனமான கதை. நான் முதலில் பார்த்த போது 'வானம் வெளித்த பின்னும்' ஹேமா என்றுதான் நினைத்தேன்! அவர்களும் பெயர்கள் மட்டும் தந்திருக்கிறார்களே தவிர ப்ளாக் முகவரி தரவில்லை.

HVL said...

@ தனபாலன்
மிக்க நன்றிங்க!
@ ஸ்ரீராம்
உங்கள் ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

கே.ஜே.அசோக்குமார் said...

வாழ்த்துகள் Hema!!

கே.ஜே.அசோக்குமார் said...

வாழ்த்துகள் Hema

இராஜராஜேஸ்வரி said...

'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே' என்பதை மனதில் கொண்டு சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பினேன்.

அது பிரசுரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் !

HVL said...

@ இராஜராஜேஸ்வரி
மிக்க நன்றிங்க!

ஸ்ரீராம். said...

வெளிவந்து விட்டதே.... படித்து விட்டேன். அருமை. கதை பற்றிய என்னுடைய கருத்துகளை நீங்கள் பதிவில் வெளியிடும்போது பின்னூட்டமிட ரிசர்வ் செய்து கொள்கிறேன்!

HVL said...

தகவலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.