28.3.13

கனவு

 
விட்டு வந்த கிராமத்தில்,

பொழுது புலராத வேளையில்,

வெடிப்புகள் நிறைந்த

ஒற்றை விளக்கெரியும் வீட்டின் முன்

தெரு கூட்டிய படி இருந்தார்

இறந்து போன மாமியார்.

தேர்ந்த ஓவியனின்

அலட்சிய தூரிகைத் தீற்றலைப்

போலிருந்த அக்காட்சியிலிருந்து

துடைப்பத்தோடு நிமிர்ந்து

‘வாம்மா!’ என்றார்.

அவர் சாவிற்கு வராத கண்ணீர்

அப்போது வந்தது.

20.3.13

யாசிப்பவனும் யோசிப்பவனும்


சுரங்க வழிப் பாதையில்
மெல்லிசைப் பாடியபடி
கீ போர்ட் வாசித்தும்
காலால் ஜால்ராவை தட்டியும்
கௌரவமாய்
சில்லறை யாசிப்பவனின்
ஒளியற்ற விழிகளை
தைரியமாய் சந்தித்து,
உண்டியலில் காசு போடாமல்
சிறு குற்றவுணர்வோடு
அவசரமாய் கடக்கிறேன் . . .
 

16.3.13

தமிழை இப்படியும் சொல்லி தராங்க!

என் பெண்ணுக்கு  பள்ளியிலிருந்து வந்த Work sheet இது.
 
நான் எழுதிய முதல் சிறுகதை
 

2.3.13

வாழ்க்கையின் இயந்திர தனத்தில் கடந்த சில  மாதங்களைத் தொலைத்து விட்டேன். இனி கொஞ்சமாவது எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.


ஒரு குறும்பா

பட்டாம் பூச்சி

வெட்டப்பட்டது அறியாமல் வெட்டவெளியில்
பூஞ்செடியைத் தேடி அலைகிறது
பட்டாம்பூச்சி

(புத்தகப் பரிசை வென்றது இக்குறும்பா)

 
பிரச்சனை

மாற்றத்துக்கு பயந்து,
வாழ்வின் கீழ்படியில்

பழசை இறுக்கமாய்

பற்றிக் கொண்டிருக்கும்
மனிதனை,

கழுத்தைப் பிடித்து

மேல்படிக்கு தள்ள
கடவுள் அல்லது பிரபஞ்சம்

அமைத்த விதி.