2.3.13

வாழ்க்கையின் இயந்திர தனத்தில் கடந்த சில  மாதங்களைத் தொலைத்து விட்டேன். இனி கொஞ்சமாவது எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.


ஒரு குறும்பா

பட்டாம் பூச்சி

வெட்டப்பட்டது அறியாமல் வெட்டவெளியில்
பூஞ்செடியைத் தேடி அலைகிறது
பட்டாம்பூச்சி

(புத்தகப் பரிசை வென்றது இக்குறும்பா)

 
பிரச்சனை

மாற்றத்துக்கு பயந்து,
வாழ்வின் கீழ்படியில்

பழசை இறுக்கமாய்

பற்றிக் கொண்டிருக்கும்
மனிதனை,

கழுத்தைப் பிடித்து

மேல்படிக்கு தள்ள
கடவுள் அல்லது பிரபஞ்சம்

அமைத்த விதி.
 
 
 


 

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குறும்பாவும் அருமை...

தொடர வாழ்த்துக்கள்...

கணேஷ் said...

கொஞ்சம் எழுதுறேன்னு சொல்லிட்டு குறும்பா எழுதினது சரி.. தலைப்பு கூடவா கூடாது? கொஞ்சத்துல தலைப்பும் சேர்த்துருங்க ))

அப்பாதுரை said...

மனதைப் பிசையும் பட்டாம்பூச்சி.
பழையதிலும் பழையதல்லவோ கடவுள்?

HVL said...

மிக்க நன்றி அப்பாதுரை, கணேஷ், தனபாலன்.

ஸ்ரீராம். said...

குறும்பா பிரமாதம். (என்ன புத்தகம் கிடைத்தது?)

இராஜராஜேஸ்வரி said...

வெட்டப்பட்டது அறியாமல் வெட்டவெளியில்
பூஞ்செடியைத் தேடி அலைகிறது
பட்டாம்பூச்சி


அழகிய பட்டா,பூச்சியின் வாழ்விலும் சோகம் ..!

புத்தகப் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்..

HVL said...

@ஸ்ரீராம்
முனைவர் மு.பி பாலசுப்பிரமணியம் (முன்னாள் பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் மற்றும் காஞ்சி பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் முதல்வர்) எழுதிய இலக்கிய முன்றில்.இது கட்டுரைகளின் தொகுப்பு.நேற்று இரவு தான் வாங்கி வந்தேன். இன்னும் படிக்க தொடங்கவில்லை.

HVL said...

மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி!

G.M Balasubramaniam said...


மகளிர் தின நினைவுகள் என்ற என் பதிவுக்குப் பின்னூட்டம் எழுதிய அப்பாதுரை உங்கள் பெயரைக் குறிப்பிட்டிருந்தார். அவர் வலையிலிருந்து இங்கு வந்தேன். பதிவுகளில் நிறைய இடைவெளி இருக்கிறதே. உங்களைப் பற்றிய குறிப்புகளும் இல்லையே. அதுதான் என் கண்ணில் இதுவரை படவில்லையோ./ வாழ்த்துக்கள்.