20.3.13

யாசிப்பவனும் யோசிப்பவனும்


சுரங்க வழிப் பாதையில்
மெல்லிசைப் பாடியபடி
கீ போர்ட் வாசித்தும்
காலால் ஜால்ராவை தட்டியும்
கௌரவமாய்
சில்லறை யாசிப்பவனின்
ஒளியற்ற விழிகளை
தைரியமாய் சந்தித்து,
உண்டியலில் காசு போடாமல்
சிறு குற்றவுணர்வோடு
அவசரமாய் கடக்கிறேன் . . .
 

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

முயற்சி தொடர வாழ்த்துக்கள்...

Ramani S said...

Arumai manamthotta kavithai Thodara vaazhththukkal

ஸ்ரீராம். said...

என் பக்கம் : நோ! நோ! இதுக்கெல்லாம் சங்கடப் பட்டா எப்படி...? விடுங்க!


புலோலியூர் கரன் said...

ம்ம் ......ரசனை..

அப்பாதுரை said...

சுருக்.

HVL said...

@ அப்பாதுரை, கரன், ஸ்ரீராம், ரமணி, திண்டுகல் தனபாலன்.

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி!

இராஜராஜேஸ்வரி said...

யாசிப்பவனும்
யோசிப்பவனும்

குற்றவுணர்வு கொள்வதும் சிந்திக்கவைக்கிறார்கள்..