28.3.13

கனவு

 
விட்டு வந்த கிராமத்தில்,

பொழுது புலராத வேளையில்,

வெடிப்புகள் நிறைந்த

ஒற்றை விளக்கெரியும் வீட்டின் முன்

தெரு கூட்டிய படி இருந்தார்

இறந்து போன மாமியார்.

தேர்ந்த ஓவியனின்

அலட்சிய தூரிகைத் தீற்றலைப்

போலிருந்த அக்காட்சியிலிருந்து

துடைப்பத்தோடு நிமிர்ந்து

‘வாம்மா!’ என்றார்.

அவர் சாவிற்கு வராத கண்ணீர்

அப்போது வந்தது.

9 comments:

Ramani S said...

மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

dark and darker :)
நன்று.

ஸ்ரீராம். said...

கனவில் நினைவின் ஈரம்.

HVL said...

மிக்க நன்றி ரமணி, ஸ்ரீராம், அப்பாதுரை
@ அப்பாதுரை
உங்க கமெண்ட்டுக்கு என்ன அர்த்தம்ன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

வாழ்த்துக்கள்...

இராஜராஜேஸ்வரி said...

கனவில் வந்த கண்ணீர்...

HVL said...

மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி.

அப்பாதுரை said...

dark/இறந்து போன மாமியார்
darker/வராது வந்த கண்ணீர்

தலையைப் பிச்சுக்குங்க :)

HVL said...

dark- ok!
darker thaan yosikka vaikkuthu