12.4.13

வெட்டிப் பேச்சு


என்னோடு வேலை செய்யும் மற்ற இன ஆசிரியர்கள் தமிழ் திரைப்பட உலகைப் பற்றி, என்னைவிட நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஒரு Malay ஆசிரியர், இந்திய மைக்கேல் ஜாக்சன் இதோ, என்று பிரபு தேவாவின் படத்தை பிரௌஸ் செய்து காட்டுகிறார். தனக்கு சூர்யாவை மிகவும் பிடிக்கும் என்றார். தனக்கு பிடிக்காத நடிகராக விஜயகாந்த்தைக் குறிப்பிட்டார். 'அவர் கண்கள் ஏன் எப்போதும் சிவப்பாக இருக்கிறது?' என்று கேட்டார். எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அங்கிருக்கும் ஒரு மாணவனை சுட்டிக் காட்டி, இவன் மாதவனைப் போல இல்லை? என்றார். உற்று பார்த்ததில் அப்படி தான் தோன்றியது.

மற்றொருவர் தனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும் என்றார். தனுஷ் ரஜினியின் மருமகன் என்று தெரிந்து வைத்திருக்கிறார். இணையத்தில் வடிவேலின் புகைப்படத்தைப் பார்த்ததும் விழுந்து விழுந்து சிரித்தார். ‘ப்ரஸன்னா ஈஸ் வெரி ஹேண்ட்சம்’ என்று சொல்லி பிரம்மிக்க வைத்தார். அவருக்கு வயது ஐம்பது.

சில புதிய நடிகர்களின் பெயர்களை சொல்லி என்னிடம் விசாரித்தார்கள் இவர்கள். அதில் சிலரை உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை. திரையுலகைப் பொருத்தவரை ஏதோ ஒரு கணத்தில் உறைந்து நின்றுவிட்டிருக்கிறேன். ஏனோ இப்போதெல்லாம் அதில் ஆர்வம் குறைந்துவிட்டது. பழைய படங்களையே தேடிப் பிடித்துப் பார்க்கிறேன். வயதாகிக் கொண்டு வருகிறது! ஹீம்ம்ம்!

 
இங்கே வருபவர்களில் சிலர் சுவிஸ் ஹேமாவாக என்னை நினைத்துக் கொண்டு வருகிறார்கள் என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறை அவர்கள் கமெண்ட் எழுதும் போதும், அந்த ஹேமாவின் ப்ளாக் என்று நினைத்து என் பதிவைப் படிக்கிறார்களோ என்ற குற்றவுணர்ச்சி எழுகிறது. இது குறித்து ஓரிருவருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். படித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இப்போது தெளிவாக சொல்கிறேன். ஐயா! நான் வேறு, சுவிஸ் ஹேமா வேறு. இதே போன்ற குழப்பங்கள் எஸ். ராவுக்கும் சுஜாதாவுக்கும் ஏற்பட்டிருப்பதாக  சொல்லியிருக்கிறார்கள். அது சற்றே தைரியமளிக்கிறது. ஒதுங்கிப் போன ராமகிருஷ்ணன்களின்  பட்டியலில் சேராத வரைக்கும் சரிதான்!

4 comments:

அப்பாதுரை said...

அப்போ நீங்க ஸ்விஸ் ஹேமா இல்லையா? :)
அதுக்காக உடனே எஸ்.ராவுக்கும் சுஜாதாவுக்கும் குழப்பம் உண்டாச்சுனு சொல்றதா? பேருக்கு ஆசைப்பட்டு எஸ்.ரா கிளப்பி விட்டதாயிருக்கும்.

HVL said...

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க!
சுஜாதாவுக்கு பெரிய குழப்பம் ஏற்படாவிட்டாலும், ரங்கராஜன் என்ற பெயரில் எழுதாமல், மனைவியின் பெயரில் எழுத காரணமாய் இதைத் தானே (பெயர் குழப்பம்) சொல்லியிருந்தார்!
ம் ம் ம் . . .

திண்டுக்கல் தனபாலன் said...

பழைய படங்கள் பார்த்தால் வயதாகி விட்டதா...?

ஸ்ரீராம். said...

சுவிஸ் ஹேமாவை HVL என்று யாராவது நினைத்திருக்கிறார்களா என்று கேட்டுப் பார்க்க வேண்டும்!